விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடனான மனக் கசப்பை மறந்து அதன் தலைவர் திருமாவளவனைச் சந்தித்து தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்தார் இயக்குநர் பா.ரஞ்சித்.அவர் திருமாவுக்கு ஆதரவாக பிரச்சாரத்திற்கும் செல்லவிருக்கிறார்.

தான் சினிமாவுக்குள் நுழைந்த சமயத்திலிருந்தே வி.சி.கவுடன் மிகவும் நெருக்கமாக இருந்த பா.ரஞ்சித் சில மாதங்களுக்கு முன் ‘தலித்துகள் ஒன்றிணைந்துதான் தேர்தலைச் சந்திக்கவேண்டுமே ஒழிய மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்கக்கூடாது’ என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
’’தேர்தல் அரசியலை கட்சி ரீதியாகத்தான் அணுகமுடியுமே ஒழிய ஜாதி ரீதியாக அணுக முடியாது. அப்படி அணுகினால் தலித்துகள் தனிமைப்படுத்தப்பட்டுவிடுவார்கள்’ என்று அப்போது பா. ரஞ்சித்துக்கு திருமாவளவன் பதில் அளித்திருந்தார்.
undefined
இதன் பின்னர் பல சந்தர்ப்பங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்கள் பா.ரஞ்சித்தின் பல செயல்பாட்களைத் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்க வி.சி.க. அலுவலகம் வந்த பா.ரஞ்சித் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். திருமாவளவனுக்கு ஆதரவாக தேர்தல் நெருங்கும் சமயம் பா.ரஞ்சித் பிரச்சாரத்துக்கும் செல்வார் என்று தெரிகிறது. இம்முறை வி.சி.க. தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகிறது.