‘ஆரவை நம்பியா நான் பொறந்தேன் போங்கடா போங்க’...ஒப்பாரி வைக்கும் ஓவியா...

Published : Jan 03, 2019, 03:05 PM ISTUpdated : Jan 03, 2019, 03:14 PM IST
‘ஆரவை நம்பியா நான் பொறந்தேன் போங்கடா போங்க’...ஒப்பாரி வைக்கும் ஓவியா...

சுருக்கம்

லிவிங் டு கெதர்ல வாழ்றோம்னு பல வதந்திகள் சுத்துது. எல்லாமே பொய். அப்படி ஒண்ணு இருந்தா, நாங்களே சொல்வோம். ஆரவ் என் நண்பர், எனக்கு ஆதரவாக இருக்கிறார். தவிர எனக்குக் கல்யாணத்துல நம்பிக்கை கிடையாது. அது வேண்டாம்னு நினைக்கிறேன். ஆனா, வாழ்க்கை நம்மை எங்கே கொண்டுபோய்ச் சேர்க்கும்னு தெரியாது.


‘புத்தாண்டு தினத்தன்று ஆரவும் நானும் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை வைத்துக்கொண்டு நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக வரும் செய்திகளில் கொஞ்சமும் உண்மை இல்லை’ என்று கொதித்துக்குமுறுகிறார் நடிகை ஓவியா.

புத்தாண்டு தினத்தன்று தனது பிக்பாஸ் தோழி ஓவியாவுடன் கொஞ்சிக்குலாவிக்கொண்டிருந்த புகைப்படங்களை வெளியிட்ட ஆரவ், அப்படத்துக்குக் கீழே ‘ஆரவ்யா’ என்று சங்கேதமாகக் குறிப்பிட்டு தாங்கள் ஈருடல் ஓருயிர் ஆகிவிட்டதை வெளிப்படுத்தியிருந்தார்.

ஆரவ்வே சொல்லியாச்சி, இனி கல்யாணம் கச்சேரிதான் என்று புத்தாண்டுச் செய்தியாக ஊடகங்கள் வரிந்து கட்டிக்கொண்டு எழுதின. சில குசும்பர்கள் ஆரவ்,ஓவியா ஜோடி திருமணத்துக்குப் பிறகு ஹனிமூன் செல்லவேண்டிய லொகேஷன்களையும் சிபாரிசு செய்திருந்தனர்.

மேற்படி செய்திகளைப் படித்துக் கொந்தளித்த ஓவியா,’ நான் தற்போது ‘ராஜ பீமா’ படத்தில் நான் ஓவியாவாகத் தான் நடிக்கிறேன். அது ஒரு கவுரவ வேடம். நானும் ஆரவ்வும் ஆடிய பாடலை, ஆரவ்தான் பாடி இருக்கிறார். என்னை புகழ்ந்து எழுதப்பட்டுள்ள பாடல் அது. ‘ஓவியா ஆர்மி’, ‘பிக்பாஸ் குயின்’ இப்படிப் பல வார்த்தைகள் அதுல வரும். ‘பிக்பாஸ்’ சமயத்துல எனக்கும், ஆரவ்வுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தது. அதனால, நிறைய சண்டைகள்.

இப்போ நாங்க சமாதானமாகி விட்டோம். அதுக்காக நானும் ஆரவ்வும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம், லிவிங் டு கெதர்ல வாழ்றோம்னு பல வதந்திகள் சுத்துது. எல்லாமே பொய். அப்படி ஒண்ணு இருந்தா, நாங்களே சொல்வோம். ஆரவ் என் நண்பர், எனக்கு ஆதரவாக இருக்கிறார். தவிர எனக்குக் கல்யாணத்துல நம்பிக்கை கிடையாது. அது வேண்டாம்னு நினைக்கிறேன். ஆனா, வாழ்க்கை நம்மை எங்கே கொண்டுபோய்ச் சேர்க்கும்னு தெரியாது.

நான் சின்ன வயதில் இருந்தே சுதந்திரமா வளர்ந்த பொண்ணு. தன்னிச்சையா செயல்படுவேன். அதனால, கல்யாணம் எனக்கு எந்தவிதத்துல செட் ஆகும்னு தெரியலை. தவிர, எனக்கு ஒருத்தரோட சப்போர்ட் வேணும்னு இப்போ வரைக்கும் தோணல” என்று வெடிக்கிறார்.

ஏற்கனவே தனக்கு பட வாய்ப்புகள் குறைவாக இருக்கும் நிலையில் ஆரவ்வுடன் திருமணம் என்று செய்திகள் வந்தால் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு பயபுள்ளகளும் புதுப்படத்துல நம்மை புக் பண்ணாது என்ற பயத்திலேயே ஓவியா இப்படி பல்டி அடிப்பதாகத் தெரிகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

காந்தா முதல் பைசன் வரை.... 2025-ம் ஆண்டு IMDb-ல் அதிக ரேட்டிங்கை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள்..!
மகளுக்காக நடிகையை ஸ்கெட்ச் போட்டு கடத்திய தயாரிப்பாளர்: திரையுலகில் பரபரப்பு