
தமிழில் களவாணி படத்தின் மூலம் அறிமுகம் ஆன ஓவியா, படங்கள் பலவற்றில் நடித்தும் முன்னணி நடிகை பட்டியலில் இடம் பிடிக்கவில்லை.
ஆனால் தற்போது ஹிட் படங்கள் கொடுக்காமலேயே தமிழ் ரசிகர்கள் பலர் ஓவியாவிற்கு ரசிகர் மன்றம், ஓவியா ஆர்மி என பல வகையில் தங்களுடைய ஆதரவை ஓவியாவிற்கு கொடுத்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட புகழ் இவரை வந்தடையக் காரணம், கடந்த மூன்று மாதத்திற்கு முன் இவர் பிரபல தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியது தான். அப்போது இவருடைய நல்ல மனதை பார்த்து குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள், மற்றும் இல்லத்தரசிகள் என அனைவரும் ஓவியா ரசிகர்களாக மாறிவிட்டனர்.
தற்போது விளம்பரம், பட வாய்ப்புகள் என பிஸியாக இருக்கும் ஓவியாவிடம் ஒரு பேட்டியில் நீங்கள் ஒரு நாள் காயத்ரியுடன் இருக்க விருப்பப் படுகிறீர்களா அல்லது ஜூலியுடன் இருக்க விருப்பப்படுகிறீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்துள்ள ஓவியா, தனக்கு, காயத்ரியுடன் இருக்கத் தான் விருப்பம். கண்டிப்பாக ஜூலியுடன் இல்லை, தன்னை காயத்ரி ஒரு சில சமயங்களில் திட்டி இருந்தாலும் அவர் என்னை நன்றாகப் பார்த்துக்கொள்வார் என்கிற நம்பிக்கை உள்ளது. ஆனால் ஜூலி மீது அந்த நம்பிக்கை துளியும் இல்லை எனக் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.