
நடிகை ஓவியாவின் கால்ஷீட் கிடைக்க வேண்டுமே என்று இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் வரிசையில் நின்றாலும் ஓவியா தன்னுடைய மனதிற்கு பிடித்த கதையைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அதன் அடிப்படையில் தற்போது, நடிகர் லாரன்ஸ் நடித்து இயக்கி வரும் காஞ்சனா 3 மற்றும் தன்னுடைய சிறு வயது நண்பன் நடித்து வரும் படத்திலும் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார்.
இவர் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பல வருடங்கள் ஆனாலும் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல மரியாதையைப் பெற்றுக்கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி என்று கூறலாம்.
மேலும் ரசிகர்கள் காட்டி வரும் அன்பை பிரித்துப் பார்க்காத ஓவியா, ரசிகர்கள் கூறும் கருத்துகளையும் ஏற்றுக்கொள்கிறார். அதேபோல் ரசிகர்கள் எதிர்பாராத நேரத்தில் சந்தித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
கடந்த ஓரிரு மாதத்திற்கு முன் சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் சென்னையைச் சேர்ந்த ரசிகரை சந்தித்த ஓவியா, இப்போது தன்னுடைய ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு நடு இரவில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அங்கு அவர்களுடன் புகைப்படம் எடுத்தது மட்டும் இல்லாமல் சின்ன குழந்தையையும் தூக்கிக் கொண்டு விளையாடியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.