குஷ்புவை தாறு மாறாக திட்டிய ஓவியா ரசிகர்கள்!

Asianet News Tamil  
Published : Sep 24, 2017, 03:52 PM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
குஷ்புவை தாறு மாறாக திட்டிய ஓவியா ரசிகர்கள்!

சுருக்கம்

oviya fans scolding kushboo

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா கலந்துக்கொண்டதன் மூலம் கோலிவுட்டில் அவருக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி விட்டது. பலர் ஓவியா ஆர்மி என்ற பெயரில் ஓவியாவுக்கு மிக தீவிர ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் சுந்தர் சி தற்போது அவருடைய கனவுப்படமான 'சங்கமித்ரா' படத்தை சிறிது  நாட்கள் கிடப்பில் போட்டு விட்டு. இவர் இயக்கி மிக பெரிய வெற்றி பெற்ற கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக தெரிவித்தார்.

இதனை உறுதி செய்யும் விதத்தில் நடிகையும் சுந்தர் சியின் மனைவியுமான குஷ்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "சுந்தர் சி கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக தெரிவித்து இந்த படத்தில் நடிகர் ஜீவா, ஜெய் மற்றும் நடிகைகள் ரெஜினா, நிக்கிகல்ராணி நடிக்க உள்ளனர்" என்று கூறினார்.

இதற்கு ஓவியா ரசிகர்கள் பலர், எங்கள் தலைவி ஓவியா தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என கூறி குஷ்புவை தாறு மாறாக திட்டி வறுத்தெடுத்து விட்டனர். ரசிகர்கள் ஆசைப்பட்டது போல் ஓவியா இந்த படத்தில் நடிப்பாரா இல்லையா என பொறுத்திருந்து பாப்போம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் டைட்டிலை தட்டிதூக்கிய திவ்யா கணேஷ்... டிராபியோடு அவர் அள்ளிச் சென்ற பரிசுகள் என்னென்ன?
பிக் பாஸ் பைனலிஸ்டுகளுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதிலும் திவ்யா தான் டாப்பு..!