
ஓவியா தற்போது பிரபல வணிக நிறுவனத்தின் விளம்பரப்படத்தில் நடித்துள்ளார். இந்த நிறுவனத்திற்காக ஏற்கனவே முன்னணி நடிகைகளான ஹன்ஷிகா மற்றும் தமன்னா ஆகிய நடிகைகள் நடித்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் இந்த வணிக நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க 50 லட்சம் மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் வெள்ளித்திரையில் வெல்ல முடியா விட்டாலும் சின்னத்திரையில் நுழைந்து தன்னுடைய உண்மையான நல்ல குணத்தால் ரசிகர்கள் அனைவரயும் கவர்ந்த ஓவியாவிற்கு இந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்கவும், புதிதாக OMR சாலையில் துவங்கப்பட உள்ள கிளைக்கு வருகை தரவும் ரூ. 1.5 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.
சமீபத்தில் ஒரு தொலை தொடர்பு நிறுவனத்தின் விளம்பத்தில் நடிக்க நயன்தாராவிற்கே 1 கோடி தான் சம்பளமாக கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது சம்பள விஷயத்தில் நயன்தாராவையே மிஞ்சியுள்ளார் ஓவியா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.