தாய்லாந்தில் ஓவியா – ஆரவ் உல்லாச சுற்றுலா! ஆரவ் வலையில் விழுந்த ஓவியா!

First Published Jul 7, 2018, 10:49 AM IST
Highlights
Oviya and Aarav relationship confirmed


பிக்பாஸ் பிரபலங்கள் ஓவியா – ஆரவ் ஜோடி பேங்காங்கிற்கு டேட்டிங் சென்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி, வைரலாகியுள்ளது. கேரளா மாநிலம் திரிச்சூரைச் சேர்ந்த ஹெலன் என்பவர், தமிழில் வெளியான களவாணி என்ற படத்தில் ஓவியாவாக அறிமுகமானார். 2010-ஆம் ஆண்டு தஞ்சை சுற்றுவட்டார கிராமிய மென்மையோடும், கேலி கிண்டலோடும் வெளியாகி வெற்றி பெற்ற “களவாணி”யில் விமலுக்கு ஜோடியாக நடித்தார் ஓவியா. கிராமத்து பெண்களின் குணாதிசயங்களோடும், குறும்புடனும் நடித்திருந்ததால், இவரது கதாபாத்திரம் வெகுவாக பிரபலமானது.தமிழில் வெற்றிபெற்ற களவாணி திரைப்படத்தின் கன்னடம் மற்றும் தெலுங்கு ரீமேக்கிலும் ஓவியாவே ஹீரோயினாக நடித்தார். தமிழில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக மெரினா, சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு மற்றும் மூடர் கூடம், மதயானை கூட்டம், புலிவால், சில்லுனு ஒரு சந்திப்பு, சண்டமாருதம் போன்ற திரைப்படங்களிலும் நடித்த ஓவியா, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மன்மதன் அம்பு திரைப்படத்தில் கவுரவ வேடத்திலும் தோன்றியுள்ளார்.இந்நிலையில், விஜய் டிவியில் கடந்த ஆண்டு நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 15 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கினார் ஓவியா. ஆரம்பத்தில் 15 பேரில் ஒருவராக இருந்தவர், தன் வெளிப்படைத் தன்மையால் ரசிகர்களைக் கவர்ந்தார். அவரது  புறம் பேசாமை, வெகுளித்தனம் ஆகிய குணங்களாலும் நடனத்திறனாலும் கவரப்பெற்ற ரசிகர்கள், ஒவ்வொரு வாரமும் உடன் இருப்பவர்களால் நாமினேட் செய்யப்பட்டபோதும், ஓட்டு போட்டு அவரை பிக் பாஸ் வீட்டிலேயே இருக்க வைத்தனர். ஓவியாவின் வெளிப்படையான நடவடிக்கைகளால் அவரை மிகவும் விரும்பிய இளைஞர்கள், ஓவியா ஆர்மி, ஓவியா இஸம் என்றெல்லாம் தங்கள் ஆதரவை சமூகவலைதளங்கள் மூலம் தெரிவித்து வந்தனர். இதனிடையே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியாளரான ஆரவ்-வை காதலிப்பதாக ஓவியா கூறினார். ஆனால், ஓவியாவை தான் காதலிக்கவில்லை என ஆரவ் கூறியதால், அவருக்கு ஓவியா ஆர்மி இளைஞர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததுடன், சமூகவலைதளங்களில் ஆரவ்-வை கடுமையாக வசைபாடவும் செய்தனர். இந்நிலையில், ஆரவ்-ஓவியா இடையே மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதை உறுதி செய்யும் வகையில் இருவரும் தாய்லாந்தின் பேங்காங்கிற்கு டேட்டிங் சென்ற புகைப்படங்கள் வெளியானது. இது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

click me!