ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி கதாநாயகனாக நடிக்கும் "ஒரு கதை சொல்லட்டுமா"

 
Published : Nov 01, 2017, 01:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி கதாநாயகனாக நடிக்கும் "ஒரு கதை சொல்லட்டுமா"

சுருக்கம்

oscar winning sound disigner acting movie

கலைத் துறையில், இந்தியாவிலிருந்து  உலக அளவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர்கள் மிகச் சிலரே. அந்த மிகச் சிலரில் முக்கியமானவர், ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் டிசைனர்  ரசூல் பூக்குட்டி. 

இவரது சவுண்ட் டிசைன்கள் உலக பிரசித்தி பெற்றவை . தற்போதான  பரபரப்பு செய்தி, ரசூல் பூக்குட்டி நடிகர் அவதாரம் எடுத்திருப்பதுதான். பிரசாத் பிரபாகரன் இயக்கும்  இந்தப் படத்தில் திருச்சூரில் வருடாவருடம் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற  பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவு செய்ய விரும்பும் கனவோடு இருக்கும்  ஒரு சவுண்ட் டிசைனராகவே ரசூல் பூக்குட்டி நடித்துள்ளார். இந்தப் படத்தை 'Palm Stone Multimedia' ராஜிவ் பனகல் தயாரித்துள்ளார். இந்தியாவின் பல்வேறு பிரம்மாண்ட படங்களோடு தொடர்புள்ள  தயாரிப்பு  நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.   

இது குறித்து இயக்குனர் பிரசாத் பிரபாகரன் பேசுகையில், ''இந்தப் படம் இதுவரை யாரும் செய்யாத முயற்சி என உறுதியாகக் கூறுவேன். கேரளாவில் உள்ள திருச்சூரில் நடைபெறும் உலக புகழ் பெற்ற பூரம் திருவிழா பல லட்சக் கணக்கான மக்கள் கலந்து கொண்டு கொண்டாடும் விழா. ஏழு நாட்கள் நடைபெறும் திருவிழா இது. ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் நூற்றுக்கணக்கான இசைக் கருவிகளை வாசிக்கும் அந்தச் சூழல் மேஜிக்காக இருக்கும். இந்த எல்லா ஒலிகளையும் ரெகார்ட் செய்ய ஆசைப்படும் ஒரு சவுண்ட் டிசைனராக ரஸூல் பூக்குட்டி நடித்துள்ளார். 

அவரது நிஜ வாழ்விலும் இது ஒரு நீண்ட நாள் ஆசை என்பது குறிப்பிடத்தக்கது . இப்படத்திற்கு 'ஒரு கதை சொல்லட்டுமா' என தலைப்பிட்டுள்ளோம். ரஸூல் இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்து நடித்ததில் எனக்கு மிகவும்  பெருமை. முழு பூரம்  திருவிழாவையும் நேரில் சென்று படமாக்குவது என்பது எளிதான காரியம் அல்ல. எனது அணி பெரும் பாடுபட்டு இந்த அசுர காரியத்தை வெற்றிகரமாக முடித்தது. படப்பிடிப்புக்கு நான்கு  மாதங்கள் முன்பே தயாராகி, பணிகளை தொடங்கிவிட்டோம். ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள்  இப்படத்திற்காக  பூரம் திருவிழா ஒலிகளை ரெக்கார்ட் செய்வதில் பணிபுரிந்தனர்.

22 காமெராக்களைக் கொண்டு அந்த விழாவில் வாசித்து அசத்திய  300க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களை  படமாக்கியுள்ளோம் . பார்வை இல்லாதவர்களும் கதையை உணர்ந்து ரசிக்கும்படி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ராகுல் ராஜ் இசையில் வைரமுத்துவின்  வரிகளில் இப்படம் உருவாகியுள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் இப்படம் வெளிவரவுள்ளது. எங்களது அசுர உழைப்பை மக்கள் கண்டு ரசித்து பாராட்டும் நாளை எதிர்நோக்கியுள்ளேன் '' என்றார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலரை ஆண்டனி  எடிட் செய்துள்ளார். இப்படப் பாடல்கள் AR ரஹ்மானின்  ஸ்டுடியோவில் ரெகார்ட் செய்துள்ளனர்.. இப்படத்தின் ஆடியோ உரிமையை 'சோனி மியூசிக்' நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் உலகத்தர இசை தரத்திற்கு இந்தச் செய்தி  மற்றுமொரு சான்றாக அமைந்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிங்கத்த பார்த்து ஷாக் ரியாக்‌ஷன் கொடுத்த சந்திரகலா அண்ட் சாமுண்டீஸ்வரி: கார்த்திகை தீபம் டுவிஸ்ட்!
கம்பீரமாக எண்ட்ரி கொடுத்த பாஸ் கார்த்திக்- சூடுபிடிக்க தொடங்கிய கார்த்திகை தீபம்; கொண்டாடும் ஃபேன்ஸ்!