ஆஸ்கார் விருது பெற்ற எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்ற பொம்மன் மற்றும் பெள்ளி, தங்களுக்கு நெல்லென்ன அடிப்படையில் இரண்டு கோடி ரூபாய் தர வேண்டும் என்று கூறி சட்டபூர்வமாக நோட்டீஸ் ஒன்றை அந்த படத்தின் இயக்குனர் கார்திகி என்பவருக்கு அனுப்பி உள்ளனர்.
வெளியாகி உள்ள தகவலின்படி, அந்த தம்பதியிரணுக்கு நல்ல வீடு ஒன்று கட்டித் தரப்படும் என்றும், அவர்கள் வாழும் மலைப்பாங்கான பகுதியில் பயன்படுத்தக்கூடிய வாகனம் ஒன்று வழங்கப்படும் என்றும், இந்த படத்தில் நடித்ததற்காக ஒரு பெருந்தொகை வழங்கப்படும் என்றும் அவர்களிடம் கூறியதாக அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த நோட்டீஸில் ஆஸ்கர் விருது வென்ற அந்த படத்தில் நடித்த பொம்மன் மற்றும் பெள்ளியை, பல
முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்திக்க மட்டும் பயன்படுத்திக் கொண்டு, படத்தின் மூலமாக தங்களுக்கு கிடைத்த வருவாயை பட குழு அவர்களுக்கு தர மறுக்கிறது என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தை எடுக்கும்பொழுது, இறுதி கட்டத்தில் செலவுக்கு காசு இல்லாமல் அந்த இயக்குனர் பொம்மன் மற்றும் பெள்ளியிடம் பணம் கேட்ட பொழுது, அவர்கள் தங்களுடைய பேத்திக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை அவரிடம் கொடுத்ததாகவும், அந்த பணத்தையும் இன்னும் இயக்குனர் கார்த்திகி அவர்களிடம் திரும்ப கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆனால் அவர்களுடைய நடிப்பின் மூலமாக வந்த புகழையும், அதன் மூலமாக கிடைத்த பணத்தையும் எடுத்துக்கொண்டு தற்பொழுது அந்த இருவருக்கு உதவாமல் இயக்குனர் கார்த்தி மௌனம் சாதித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டாலும், அவர் போனை எடுப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் Sikhya Entertainment என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இனி அந்த தம்பதியருக்கு தான் எந்த பணமும் தரவேண்டிய தேவை இல்லை என்றும் ஏற்கனவே அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து முடித்து விட்டதாகவும் பட இயக்குனர் சார்பில் அந்த தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் செய்வதறியாது தவித்து வரும் அந்த வயதான பொம்மன் மாற்றும் பெள்ளி, தங்களுக்கு நல்லெண்ண அடிப்படையில் இரண்டு கோடி ரூபாய் தர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ரா.. ரா.. ஸ்டைலில் வெளியாகும் ஸ்வாகதாஞ்சலி.. ஜோதிகாவை மிஞ்சுவாரா கங்கனா? - ரசிகர்கள் சொல்வதென்ன?