
91வது ஆஸ்கர் திரைப்பட விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் சிறந்த படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்ற விழாவை தொகுப்பாளர் இல்லாமல் பிரபலங்கள் தொகுத்து வழங்கினர்.
சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது, Roma திரைப்படத்தை இயக்கிய Alfanzo Cuaron-க்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பொஹிமியான் ரப்சோடி படத்தில் நடித்த ரமி மாலிக்குக்கு வழங்கப்பட்டது. இதேபோன்று, சிறந்த நடிகைக்கான விருது ”தி ஃபேவரைட்” படத்தில் நடித்த ஒலிவியா கால்மேனுக்கு வழங்கப்பட்டது.
மற்ற விருது விபரங்கள் வருமாறு...
சிறந்த திரைப்படம்: க்ரீன் புக்
சிறந்த நடிகை: ஒலிவியா கோல்மன் (தி வெஃப்ரைட்)
சிறந்த நடிகர்: ரமி மாலிக் ( போஹிமியன் ராப்சடி )
சிறந்த துணை நடிகர்: மகர்ஷாலா அலி ( க்ரீன் புக்)
சிறந்த துணை நடிகை: ரெஜினா கிங் - இஃப் பெலே ஸ்டிரிட் குட் வாக்
சிறந்த இயக்குநர்: அல்போன்சா கவுரான் ( ரோமா)
சிறந்த வெளிநாட்டு திரைப்படம்: ரோமா (மெக்சிகோ)
சிறந்த ஆவணப்படம்: பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ் (இந்தியா)
சிறந்த அனிமேஷன் திரைப்படம்: ஸ்பைடர் மேன் : இண்டு தி ஸ்பைடர் வெர்ஸ்
சிறந்த திரைக்கதை: க்ரீன் புக்
சிறந்த தழுவல் திரைக்கதை: சார்லி வாச்டெல் , டேவிட் ராபின்சன், கெவின் வில்மோட், ஸ்பைக் லீ - பிளாக்லென்சன் திரைப்படம்
சிறந்த இசை: லுட்விக் கோரன்சன் - பிளாக் பந்தர்
சிறந்த பாடல்: ஏ ஸ்டார் பார்ன் - ஷோலோ திரைப்படம்
சிறந்த ஆவணப்படம்: பிரி சோலோ
சிறந்த குறும்படம்: இன்
சிறந்த சண்டை காட்சி: ஸ்கின்
சிறந்த ஒளிப்பதிவு: அல்போன்சா கவுரான் - ரோமா திரைப்படம்
சிறந்த அனிமேஷன் காட்சி : பாவோ
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: பிளாக் பந்தர்
சிறந்த ஆடை வடிவமைப்பு: பிளாக் பந்தர்
சிறந்த ஒப்பனை: வைஸ்
சிறந்த ஒலிப்பதிவு : போஹிமியன் ராப்சடி
சிறந்த ஒலி கலவை: போஹிமியன் ராப்சடி
சிறந்த எடிட்டிங் : போஹிமியன் ராப்சடி
சிறந்த காட்சி: ஃபர்ஸ்ட் மேன்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.