Oscars 2024 : உலக அளவில் வழங்கப்படும் 96வது ஆண்டு அகாடமி விருதுகள் இன்று மார்ச் 10ம் தேதி இரவு லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஓவேஷன் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழா இன்று இரவு துவங்க உள்ள நிலையில், நாளை மார்ச் 11ம் தேதி காலை 4 மணி அளவில் (இந்திய நேரப்படி) ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்படவுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளுக்கான சர்வதேச திரைப்படப் பிரிவில் இந்தியாவின் நுழைவுத் தேர்வாகத் மலையாளத் திரைப்படம் "2018" தேர்வானது.
ஆனால் இறுதி சுற்றில் ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது 2018. அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, இயக்குனர் ஜூட் அந்தனி ஜோசப்பின் இயக்கத்தில் உருவான 2018 படம் ஆஸ்காரின் இறுதி பட்டியலில் உள்ள 15 படங்களின் பட்டியலில் ஒரு இடத்தைப் பெற முடியவில்லை.
undefined
ஹாய் மச்சான்ஸ்! உடல் எடையை குறைத்து பியூட்டி குயினாக... மீண்டும் ரியாலிட்டி ஷோவில் களமிறங்கிய நமீதா
இதற்கிடையில், ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டின் பின்னணியில் இருந்த விஞ்ஞானி ராபர்ட் ஓப்பன்ஹைமரையும் அவரது வாழ்க்கையையும் மையமாகக் கொண்ட பயோ பிக் படம், 'சிறந்த படம்', 'சிறந்த இயக்குனர்' மற்றும் 'சிறந்த தழுவல் திரைக்கதை' உட்பட 13 பிரிவுகளில் பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் இதை நேரலை செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கார் விருதுகள் 2024 மார்ச் 11 அன்று நடைபெறும் மற்றும் இந்திய நேரப்படி அதிகாலை 4:00 மணிக்கு தொடங்கும். நகைச்சுவை நடிகரும், டாக் ஷோ தொகுப்பாளருமான ஜிம்மி கிம்மல் நான்காவது முறையாக ஆஸ்கார் விருதை தொகுத்து வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி விஜயின் GOAT.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்த யுவன் சங்கர் ராஜா - என்ன அது தெரியுமா?