நீங்களும் சினிமாவில் ஸ்டார் ஆக வேண்டுமா..? பிரபல இயக்குநரின் படத்தில் நடிக்க வாய்ப்பு..!

Published : Aug 23, 2019, 12:55 PM IST
நீங்களும் சினிமாவில் ஸ்டார் ஆக வேண்டுமா..? பிரபல இயக்குநரின் படத்தில் நடிக்க வாய்ப்பு..!

சுருக்கம்

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநராக ஜொலிக்கும் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க அழைப்பு விடுத்துள்ளனர்.  

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநராக ஜொலிக்கும் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் தேசிய அளவில் அனைவரது கவனத்தையும், பாராட்டுக்களையும்  பெற்றது. இந்த திரைப்படம் தேசிய விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் அப்படத்தை இயக்கிய மாரிசெல்வராஜ் அடுத்த படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார். இந்தப்படத்தில் நடிக்க நடிகர்கள், நடிகைகள் தேர்வு செய்யப்பட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதன்படி தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகஸ்ட் 25 முதல் 27 வரை நடைபெறக்கூடிய இந்த ஆடிஷனில் கலந்து கொள்ளலாம். இதற்கு வயது வரம்பு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. நடிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் நம்பர் - 4,தென்றல் நகர், மகாராஜா நகர் போஸ்ட், திருநெல்வேலி (அரசு சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை எதிரில்) என்கிற முகவரிக்கு சென்று பங்கேற்று கொள்ளலாம். மேலும் தகவலுக்கு 9176269475 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம் என படக்குழு அறிவித்துள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!