’வருஷத்துக்கு ஒரு படம் கூட வராட்டாலும் பரவாயில்லை...எனக்கு இத்தனை கோடி சம்பளம் வேணும்’...முரண்டு பிடிக்கும் ராஜ்கிரண்...

By Muthurama LingamFirst Published Aug 23, 2019, 12:24 PM IST
Highlights

வீட்டில் சும்மா இருந்தாலும் இருப்பேனே தவிர நான் கேட்கிற சம்பளம் கிடைக்காவிட்டால் அது எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் நடிக்கமாட்டேன் என்ற கொள்கை உடையவர் ராஜ்கிரண். வீட்டில் சும்மா இருப்பதற்குப் பதில் அது எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் சரி எவ்வளவு குறைவாக சம்பளமாக இருந்தாலும் நடிப்பேன் என்ற கொள்கை உடையவர் சத்யராஜ். முன்னவருக்கு சம்பளம் கட்டுபடியாகாத  ஒரு படத்தில் பின்னர் கமிட் ஆகியிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்,ரஜினிமுருகன்,சீமராஜா ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் அடுத்து இயக்கும் படத்தில் சசிகுமார் கதாநாயகன்.இந்தப் படத்தில் நடிகர் ராஜ்கிரண் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று சொல்லப்பட்டது.ஏற்கெனவே ரஜினிமுருகன் படத்தில், பொன்ராம் இயக்கத்தில் நடித்திருந்த ராஜ்கிரண், இந்தப் படத்திலும் நடிக்கவிருக்கிறார் என்றும் சொன்னார்கள். ஆனால் இப்போது ராஜ்கிரண் நடிக்கவில்லையாம். அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்காததால் படத்திலிருந்து அவர் விலகிக் கொண்டாராம்.

அவருக்குப் பதிலாக சத்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ராஜ்கிரண் போலவே சத்யாராஜும் பொன்ராமின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தவர்தான்.விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம். இப்படம் இரண்டு மூன்று தயாரிப்பு நிறுவனங்களைக் கடந்து இப்போது ஸ்கிரீன் சீன் நிறுவனத்திடம் வந்திருக்கிறது. அந்நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. முதல்பிரதி அடிப்படையில் இப்படத்தைத் தயாரித்துக் கொடுப்பவர் சமுத்திரக்கனி.

சரி ராஜ்கிரண் கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? 3 கோடி. தயாரிப்பு நிறுவனம் அவருக்குத் தர முன் வந்தது 1.50 கோடி. அதை அவர் மறுத்ததால் அதே கேரக்டருக்கு சத்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு அவருக்கு ஒரு கோடி சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பள பிடிவாதத்தால் ராஜ்கிரண் கடந்த 5 ஆண்டுகளில் வெறுமனே நான்கு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!