
வாரத்திற்கு ஒரு திரைப்படத்தையாவது திரையரங்கம் சென்று பார்த்து விட வேண்டும் என நினைக்கும் பல சினிமா ரசிகர்கள் உள்ளனர். அதே போல் நேரம் கிடைக்கும் போது பலர் குழந்தைகளோடு சினிமா பார்க்க செல்கிறார்கள். திடீர் என முடிவு செய்யும் இப்படி பட்ட பலர், டிக்கெட் முன் பதிவு செய்ய முதலில் ஆன்லைனை தான் தேர்வு செய்கிறார்கள்.
இப்படி ஆன்லைன் மூலம் பட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, சேவை கட்டணமாக ஒரு டிக்கெட்டுக்கு ரூபாய் 30 அதிகமாக செலுத்தும் நிலை உள்ளது. 50 டிக்கெட்டுகள் புக் செய்தாலும், 30 ரூபாய் சேவை கட்டணம் என்பது சற்றும் தளத்தப்படாத விதியாகவே இருந்தது.
இதனால் சேவை கட்டணத்தை குறைக்க, ஆன்லைன் வாடிக்கையாளர்கள் பலர், தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். நடிகர் சங்கள், தயாரிப்பாளர் சங்கங்களிலும் இது குறித்த கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதனை யாரும் கண்டுகொள்ளவே இல்லை.
இந்த நிலையில் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் இனி ஆன்லைனில் டிக்கெட் முன் பதிவு செய்தால், எத்தனை டிக்கெட் முன் பதிவு செய்தாலும் ஒரு டிக்கெட்டுக்கான சேவை கட்டணம் மட்டுமே வசூலிக்கபடும் என தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து, படம் பார்க்கும் பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.