
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்ற பிரபலங்களின் பெற்றோர் உள்ளே வந்ததை விட, லாஸ்லியாவின் பெற்றோர் உள்ளே வந்து, அவரிடம் பேசியது, தங்களுக்கு மகள் தலைகுனிவை ஏற்படுத்தி விட்டாரே என, அழுது புலம்பிய காட்சிகள், இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் கண்களையே கலங்க வைக்கும் விதமாக இருந்தது.
ஆரம்பத்தில் லாஸ்லியா - கவின் காதல் விஷயம் குறித்து தெரிந்ததும் மிகவும் கோவப்பட்ட அவருடைய குடும்பத்தினர், பின் ஒருவழியாக சமாதானம் ஆகினர்.
மனதை விட்டு கோவம் சென்றதும், லாஸ்லியாவின் தந்தை அடுத்தமுறை கமல் சார் வரும் போது, அவரிடம் மன்னிப்பு கேள் என கூறுகிறார். இதற்கு ஏன் என லாஸ்லியா கேட்க... அவர் மிகவும் பெரிய மனிதர் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். கால் மேல் கால் போட்டு அவர் முன் அமர கூடாது என கூறுகிறார்.
இதற்கு லாஸ்லியா இங்கு இருக்கும் அனைவரும் அப்படி தான் அமர்கிறார்கள். மரியாதை என்பது மனதில் இருந்தால் போதும், அதை ஏன் செய்துகாட்ட வேண்டும் என எதிர் பேச்சு பேசினார்.
லாஸ்லியாவின் பதிலில் உடன்பாடு இல்லாத, அவரது தந்தை... ஊடகங்கள் பல்வேறு விதமாக எழுதுகிறார்கள் என கூறியபோது, அவர்கள் ஆயிரம் எழுதுவார்கள், எழுதி கொண்டேதான் இருப்பார்கள் அதெல்லாம் கண்டுகொள்ள கூடாது என தன்னுடைய அப்பா கொடுத்த அறிவுரையை கடைசி வரை ஏற்காமல் இருந்தார் லாஸ்லியா என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.