ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் என்று பல மொழிகளில் வெளியாகவுள்ளது.
பிரபல தமிழ் நடிகர் சூர்யா இன்று தனது 48வது வயதில் அடி எடுத்து வைத்துள்ளார், இந்நிலையில் அவருடைய பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் அவர் தற்பொழுது நடித்துவரும் கங்குவா படத்தின் பட குழு இரவு 12 மணிக்கு இந்த படத்தில் இருந்து ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டது. எஸ்.ஜே சூர்யா அவர்களுடைய குரலில் துவங்கிய அந்த வீடியோ, இறுதியில் சூர்யா, "நலமா" என்று இன்று கேட்பதோடு முடிந்தது.
உண்மையில் இத்தனை நாள் காத்திருந்து, கங்குவா படத்திற்காக எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இது ஒரு மிக மிகப் பெரிய விருந்து என்றே கூறலாம். சூர்யாவின் திரை வரலாற்றில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஒரு திரைப்படம் கங்குவா என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் இந்த திரைப்படம் வெகு ஜோராக உருவாகி வருகிறது, ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் என்று பல மொழிகளில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக எதிர்வரும் 2024ம் ஆண்டு வெளியாக உள்ளது.
பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஏற்கனவே ஒரு அப்டேட் வெளியாகி உள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு அடுத்து ஒரு அப்டேட் வெளியாக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் தெரிவித்துள்ளது.
இந்த செய்தி சூர்யாவின் ரசிகர்களை இன்னும் மிகப்பெரிய சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது, கங்குவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பாதணி நடித்திருக்கிறார். நட்டி வில்லனாக நடிக்க ஒரு பேண்டஸி திரைப்படமாக இது உருவாகி வருகிறது.
டூர் போன இடத்தில் டூபீஸ் போட்டோஷூட்... ‘கண்ணழகி’ பிரியா பிரகாஷ் வாரியரின் செம்ம ஹாட் கிளிக்ஸ் இதோ