தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அவர்களின் மூத்த மகளான மீரா விஜய் ஆண்டனி, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தனது மகள், தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ந்த விஜய் ஆண்டனி, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் மீராவை சோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். விஜய் ஆண்டனி மகள் மீரா 12ம் வகுப்பு படித்து வரும் நிலையில், அவருக்கு என்ன பிரச்சனை இருந்தது.
அவர் இப்படி ஒரு விபரீத முடிவை எடுக்க காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பல திரைப்பிரபலன்களும், நேரிலும், சமூக வலைத்தளம் மூலமாகவும் மீராவின் இழப்புக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தளபதி விஜயின் அம்மா ஷோபா, நேரில் சென்று விஜய் ஆண்டனி குடும்பத்திற்கு தனது ஆறுதலை கூறினார்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி, மீரா தற்போது பயின்று வரும் பள்ளியில் ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில் அப்பள்ளியின் ஒரு குறிப்பிட்ட துறைக்கு செயலாளராக செயல்பட்டு வரும் மீரா, அந்த நிகழ்ச்சியில், மேடையேறி சில உறுதிமொழிகளை ஏற்கிறார். படிப்பிலும், பிற நடவடிக்கைகளிலும் மீரா சிறந்து விளங்கிவந்தவர் என்பதை நிரூபிக்கும் வண்ணம் உள்ளது இந்த காணொளி.
Thank you lord for all these Blessing, we r unworthy,ur love is great.congrats Meera Vijay Antony ❤️❤️❤️❤️🤗🤗 pic.twitter.com/VsKPdyeB0B
— Fatima (@mrsvijayantony)இந்த வீடியோவை மீராவின் தாய் பாத்திமா தான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சில மாதங்களுக்கு கம்பீரமாக மேடை ஏறி பேசிய அந்த பெண் இளம் பெண் இன்று தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் ஆண்டனி மகள் தற்கொலை!! தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட முக்கிய வேண்டுகோள்!