நிர்வாணத்தை கலையா பாருங்க: ராஷிகண்ணா நறுக்!

Published : Feb 08, 2020, 11:04 AM IST
நிர்வாணத்தை கலையா பாருங்க:	ராஷிகண்ணா நறுக்!

சுருக்கம்

தமிழ் சினிமாவின் அதிரடி ஹீரோயின் அமலா பால். ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் நடித்து செம்ம வைரலை கிளப்பினார். இந்த நிலையில் ‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ படத்தில் ராஷி கண்ணாவும் ஒரு காட்சியில் நிர்வாணமாக குளிப்பது போன்ற காட்சி டீசரில் உள்ளது. இதைப் பற்றி கேட்டதற்கு ‘அந்த காட்சி கலைக் கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.’ என்று எஸ்கேப்பி இருக்கிறார் ராஷி.

*    ரஜினியின் தர்பார் படத்துக்கு முதல் ஷோவிலிருந்தே எதிர்மறை விமர்சனங்கள் வந்து குவிந்தன. ஆனால் ‘வசூல் அள்ளுது!’ என்று இயக்குநரும், தயாரிப்பு தரப்பும் மறுத்துப் பேசியே வந்தனர். இந்த நிலையில் தர்பார் படத்தால் நஷ்டப்பட்டுவிட்டோம் என்று விநியோகஸ்தர்களே ரஜினியின் வீட்டில் போய் நின்றதுதான் தர்பாரின் மரியாதையை கிழித்திருக்கிறது.

*    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்துக்கு துவக்கத்தில் இருந்தே செம்ம பப்ளிசிட்டிதான். ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், லீக்டு ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ என்றெல்லாம் போய்க் கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் நெய்வேலியில் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் சூழ்ந்தனர். அங்கிருந்து அவரை அப்படியே தங்கள் இன்னோவாவில் சென்னைக்கும் அழைத்து வந்தனர். இதையும் கூட அப்படத்துக்கான பப்ளிசிட்டியாக மாற்றியுள்ளது படத்தின் க்ரூ!
மாஸ்டர் ஸ்பாட்டில் வளைக்கப்பட்ட விஜய்! வருமான வரித்துறையையே மிரள வைத்த மாஸ்டர் விஜய்யின் கெட் - அப்! என்றெல்லாம் ஏகத்துக்கும் சோஷியல் மீடியாவில் அள்ளி விடுகின்றனர். 

*     தல அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் முடிந்து செகண்ட் ஷெட்யூலுக்காக ரெடியாகிறது யூனிட். ஆனால் அதற்குள் சிலர் அப்படம் பற்றி நெகட்டீவாக கிளப்பிவிட்டனர் சில தகவல்களை. டென்ஷனான அஜித், தயாரிப்பாளர் போனிகபூரை பார்க்க, அவரோ மளமளவென அவற்றுக்கு மறுப்பு செய்திகளை கசியவிட்டதோடு, செகண்ட் ஷெட்யூலுக்கு  லம்பாக ஒரு தொகையை ஒத்த செக் போட்டு ப்ரொடக்‌ஷன் மேனேஜரிடம் கொடுத்துவிட்டாராம். 

*    தமிழ் சினிமாவின் அதிரடி ஹீரோயின் அமலா பால். ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் நடித்து செம்ம வைரலை கிளப்பினார். இந்த நிலையில் ‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ படத்தில் ராஷி கண்ணாவும் ஒரு காட்சியில் நிர்வாணமாக குளிப்பது போன்ற காட்சி டீசரில் உள்ளது. இதைப் பற்றி கேட்டதற்கு ‘அந்த காட்சி கலைக் கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.’ என்று எஸ்கேப்பி இருக்கிறார் ராஷி. 
(ஆனால் இப்போது சில டீசர்களில் ராஷியின் அந்த காட்சியை எடிட் செய்து அப்புறப்படுத்தியுள்ளனர்)
கலையை ரசிக்க விடமாட்டானுங்களே!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Arasan: மதுரையில் ரீ-என்ட்ரி கொடுக்கும் 'அரசன்'.! வெற்றிமாறனின் மாஸ்டர் பிளான் என்ன?!
Nayanthara and Trisha : நீண்ட காலத்திற்கு பின் ஒன்றாக சுற்றும் நயன்தாரா, திரிஷா.. சந்திப்புக்கு இதுதான் காரணமா?!