எந்த கெட்டப்பழக்கமும் இல்லாத ஆனந்த கண்ணனுக்கு இவ்வளவு கொடுமையான கேன்சரா? நிறைவேறாத கடைசி ஆசை!

By manimegalai aFirst Published Aug 17, 2021, 4:20 PM IST
Highlights

பித்தப்பை புற்று நோய் காரணமாக கடந்த சில வருடங்களாக அவதி பட்டுவந்த ஆனந்த கண்ணன், நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 48 . இவருடைய மறைவு குறித்து, பிரபல பாடகி NSK ரம்யா, ஏற்கனவே நீண்ட பதிவு ஒன்றை போட்டு, அவருடனான நட்பு மற்றும், உறவு குறித்து பகிர்ந்துகொண்ட நிலையில், தற்போது... அவர் பிரபல ஊடகம் ஒன்றிக்கு கொடுத்துள்ள பேட்டியில் இவரை பற்றி பலருக்கும் தெரியாத தகவல்களை பகிர்துகொண்டுள்ளார்.
 

பித்தப்பை புற்று நோய் காரணமாக கடந்த சில வருடங்களாக அவதி பட்டுவந்த ஆனந்த கண்ணன், நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 48 . இவருடைய மறைவு குறித்து, பிரபல பாடகி NSK ரம்யா, ஏற்கனவே நீண்ட பதிவு ஒன்றை போட்டு, அவருடனான நட்பு மற்றும், உறவு குறித்து பகிர்ந்துகொண்ட நிலையில், தற்போது... அவர் பிரபல ஊடகம் ஒன்றிக்கு கொடுத்துள்ள பேட்டியில் இவரை பற்றி பலருக்கும் தெரியாத தகவல்களை பகிர்துகொண்டுள்ளார்.

ஆனந்த கண்ணன், 2007 ஆம் தான் NSK ரம்யாவுக்கு அறிமுகமாகியுள்ளார். இவர்கள் இருவரும், ஒரே நாளில் ரேடியோ ஜாக்கியாக சேர்ந்ததாகவும், அன்று என்னை தங்கை என அழைக்க துவங்கியவர், கடைசி வரை தனக்கு ஒரு தந்தை போலவும், நண்பனாகவும், சகோதரராகவும் இருந்தார். சிங்கப்பூரில் இருந்து சென்னை வருவதாக இருந்தால் முதலில் எனக்கு தான் போன் செய்து சொல்வார். ஆனால் அவர் சிங்கப்பூரில் இருந்ததால் அவரது முகத்தை கூட கடைசி நேரத்தில் பார்க்க முடியாமல் போய் விட்டது என கண் கலங்கி அழுதுள்ளார்.

கடைசியாக அவரிடம் 5 நாட்களுக்கு முன் பேசியதாகவும், அப்போது எப்படி இருக்க ரம்யா என என்னை கேட்டு விட்டு, அவரது மனைவி மற்றும் அம்மாவிடம் போனை கொடுத்துவிட்டார். அப்போது அவருக்கு அதிகமான பெயின் கில்லர் கொடுத்திருந்தனர். அதன் காரணமாக அவரது வாய் குளறியதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எப்படி இருந்தாலும், அவர் அந்த கேன்சரில் இருந்து மீண்டு வந்து விடுவார் என நம்பிக்கையோடு காத்திருந்தோம் ஆனால் அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது என கூறியுள்ளார்.

ஆரம்ப காலத்தில் அவருக்கு பித்தப்பையில்... கல் இருக்கிறது என்று தான் சொன்னார்கள். நாளுக்கு நாள் வயிற்றில் வலி ஏற்படவே மருத்துவமனைக்கு சென்று செக் செய்த போது அவருக்கு பித்தப்பை கேன்சர், 3 ஆவது ஸ்டேஜ் என தெரியவந்தது. உடனடியாக இவரது பித்தப்பையை நீக்கியும், அவரது உடலில் கேன்சர் பரவ தொடங்கி விட்டது. இந்த வகை கேன்சர் மிகவும் அரிதானது என்றும், வயதானவர்களுக்கு தான் வரக்கூடியது, இவருக்கு இளம் வயதிலேயே வந்ததால் சீக்கிரமாக பரவி விட்டது கொடுமையின் உச்சம் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஆனந்த கண்ணனுக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை, இவருக்கு இதுபோன்ற ஒரு நோய் வந்தது தான் ஏற்று கொள்ள முடியாதது என்றும், தன்னுடன் புகைப்படம் எடுக்க தயங்கும் ரசிகர்களை கூட அழைத்து சிரிக்க வைத்து தான் அனுப்புவார். எப்போதுமே நான் ஒரு பிரபலம் என்பதை எந்த இடத்திலும் அவர் காட்டியதே இல்லை. என தெரிவித்துள்ள NSK ரம்யா... அவரது நிறைவேறாத ஆசை ஒன்றையும் கூறியுள்ளார்.

தமிழ் கலாச்சாரம் மற்றும் கிராமிய கலைகளை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்து வந்த இவர், தமிழ் கலைகளை உலகம் முழுவதும் எடுத்து செல்லவேண்டும் என ஆசை பட்டவர், பல நாடுகளுக்கு சென்றிருந்தாலும், அவரது கனவு நிறைவேறுவதற்கு முன்பே இறந்து விட்டார். அவர் மிகவும் நல்ல மனிதர் என தெரிவித்துள்ளார்.

click me!