
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு ரிலீசாகி உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. பல்வேறு சர்ச்சையில் சிக்கிய நிலையிலும் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடி, , தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா என தென்னிந்தியாவிலும், மற்ற பிற வெளிநாடுகளிலும் வசூல் சாதனை படைத்து வருகிறது.
நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இப்படத்தை தமிழக பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து வைகோ முதல் ராகுல் காந்தி வரை ஒட்டு மொத்தமாக இப்படத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இலங்கை அமைச்சர் ரஞ்சன் ராமநாயகே பாராட்டு தெரிவித்துள்ளார்.
இலங்கையை சேர்ந்த பிரபல நடிகரும், அந்நாட்டின் சமூக மேம்பாட்டுத்துறை இணை அமைச்சருமான ரஞ்சன் ராமநாயகே, மெர்சல் பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
மெர்சல் திரைப்படம், அனைத்து அரசியல்வாதிகளும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம், என்று அவர் கூறியுள்ளார். இதுவொரு ஆக்ஷன் கலந்த மசாலா படமாக இருந்தாலும், மக்களுக்கு நல்ல செய்தியை கூறியிருக்கிறது என்றும், இதற்காக நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் அட்லிக்கு, தனது பாராட்டு தெரிவித்துக் கொள்வதாகவும், இலங்கை அமைச்சர் ரஞ்சன் கூறியுள்ளார்.
மெர்சல் திரைப்படம், மருத்துவத்துறை மாபியாக்களின் மோசடிகளை அம்பலப்படுத்தியுள்ளது, என்று கூறியுள்ள அவர், இப்படத்தில் விஜய் கூறுவது போல், அரசியல்வாதிகளும் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெற வேண்டும், என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.