
ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் தனது வீடு புகுந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹாலிவுட் நடிகை தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுக்கடுக்காக குவிந்து வருகிறது. காமக்கொடூர தயாரிப்பாளர் தங்களை பலாத்காரம் செய்ததாக இதுவரை 9 நடிகைகள் மீடியாக்களில் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஹாலிவுட் நடிகை அன்னபெல்லாவும் பட தயாரிப்பாளர் வெயின்ஸ்டீன் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, 1992ம் ஆண்டு வெயின்ஸ்டீன் நியூயார்க்கில் உள்ள எனது அபார்ட்மென்ட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். அவர் அப்போது ஏன் கற்பை சூறையாடினர். நான் அவரிடம் இருந்து தப்பிக்க எவ்வளவோ போராடினேன். ஆனால் முடியவில்லை. அவர் கதவை தட்டியபோது ஏன் திறந்தோம் என்று நொந்து கொண்டேன். அதில் இருந்து அவர் எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.
இந்த காமக்கொடூரனின் பாலியியல் தொல்லையால் மிகவும் மனவுளைச்சலில் இருந்தேன். இதுவரை இந்த சம்பவம் குறித்து நான் போலீசில் புகார் தரவில்லை. ஆனால் என் சினிமா வாழ்க்கை அந்த காமக்கொடூரனால் பாழாய் போனது.
கடந்த 1995ம் ஆண்டு வரை வேலை இல்லாமல் இருந்த நான் வாய்ப்பு கேட்டு எங்கு சென்றாலும் உங்களிடம் வேலை கொடுக்கமுடியாது. இது போன்ற வேலைகளெல்லாம் வெயின்ஸ்டீன் தான் செய்துள்ளார். அதுமட்டுமல்ல,1997ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றிருந்தேன். அப்போது அவர் உள்ளாடை மட்டும் அணிந்து என் ஹோட்டல் அறைக்கு வந்தார் என்றார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.