பாஜகவின் மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை !! தில் தீபிகா படுகோனே !!

Selvanayagam P   | others
Published : Jan 09, 2020, 10:03 AM IST
பாஜகவின் மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை !! தில் தீபிகா படுகோனே !!

சுருக்கம்

ஜேஎன்யூ மாணவர்களுக்கு ஆதரவு அளித்ததற்காக தமக்கு மிரட்டல் வருவதாகவும் ஆனால் அந்த மிரட்டல்களுக்கெல்லாம் தான் அஞ்சப் போவதில்லை என நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.

ஜேஎன்யு பல்கலைக்கழகத்திற்குள், ஆர்எஸ்எஸ்-ஸின் மாணவர் பிரிவான ஏபிவிபி-யைச் சேர்ந்த முகமூடி குண்டர்கள், கடந்த 5 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் திடீரென புகுந்து, அங்குள்ள மாணவ - மாணவியர், பேராசிரியர்கள் மீது ஆயுதங்களைக் கொண்டு, மிகக்கொடூரமான தாக்குதலை நடத்தினர். 

நாடு முழுவதும் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாலிவுட் நடிகர் - நடிகைகள் இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இந்த நாட்டில் மாடுகளுக்கு உள்ள பாதுகாப்பு கூட மாணவர்களுக்கு இல்லைஎன்று பாலிவுட் நடிகை டிவிங்கிள் கண்ணா தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.. நடிகர் அனுராக் காஷ்யப், நடிகை டாப்ஸி ஆகியோர் ஜேஎன்யு பல்கலைக்கழகத்திற்கே சென்று, அங்கு போராடும் மாணவர்களுக்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்  இந்நிலையில், முன்னணி பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே-வும் ஜேஎன்யு பல்கலைக்கழகத்திற்கு சென்று, போராடும்மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

தாக்குதலுக்கு உள்ளான ஜேஎன்யு மாணவர் பேரவைத் தலைவர் அய்ஷே கோஷைகட்டியணைத்து தனது ஆறுதலை வெளிப்படுத்தினார். இதனிடைபே தீபிகா நடித்த சப்பாக் படத்தை யாரும் பார்க்கக கூடாது வலது சாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பல இடங்களில் அந்தப் படத்துக்காக டிக்கெட்டுகள் கேள்சல் செய்யப்பட்டு வருகின்றன.

இது குறித்து கருத்து தெரிவித்த நடிகை தீபிகா படுகோனே,  “மாணவர்களுக்காகக் குரல்கொடுக்கவும் தங்களை வெளிப்படுத்தவும், மக்கள் சாலைகளில் இறங்கி நின்று போராடுவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. ஏனெனில், நாம் மாற்றத்தைக் காண விரும்பினால் இது முக்கியமானதாக இருக்கும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் தனக்கு வரும் மிரட்டல்களுக்கு தான் அஞ்சப் போவதில்லை என அதிரடியாக தெரிவித்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025ல் சாங்க்ஸில் பட்டைய கிளப்பிய டாப் 5 பாடல்கள்; ஓ இந்த பாடல் தான் டாப்பா?
தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!