
ஏ.ஆர்.முருகதாஸ் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான பிரம்மாண்ட திரைப்படமான "தர்பார்" இன்று ரிலீஸாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே வெளியாகியுள்ள "தர்பார்" திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான 'பேட்ட' திரைப்படத்தை விட, சூப்பர் ஸ்டார் "தர்பார்" படத்தில் எங் லுக்கில் செம்ம சுறுப்பாக பட்டையைக் கிளப்பியிருக்கார்.
இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். நயனுடன் - சூப்பர் ஸ்டார் இருப்பது போன்ற போஸ்டர்கள் மற்றும் பாடல் காட்சிகள் வெளியாகி சோசியல் மீடியாவை தெறிக்கவிட்டது. அப்படியொரு செம்ம கிளாமர் லுக்கில் ரசிகர்களை மயங்கியிருந்தார் நயன்.
'சந்திரமுகி' படத்தில் நடித்த போது புதுமுகமாக இருந்த நயன்தாரா, இப்போது லேடி சூப்பர் ஸ்டார் அளவிற்கு உயர்ந்து விட்டார். அதனால் "தர்பார்" படத்தில் அவருக்கு வெயிட்டான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் "தர்பார்" படத்தில் அப்படி எதுவும் இல்லை என்பது நயன் ஃபேன்ஸை செம்ம அப்செட்டாக்கியுள்ளது.
ஹீரோவை காதலிப்பது, நாலு பாட்டுக்கு டான்ஸ் ஆடுவது, கவர்ச்சி காட்டி அசரடிப்பது என்ற டிராக்கை விட்டு எப்போதோ வெளியே வந்த நயன்தாராவை, ஏ.ஆர்.முருகதாஸ் வலுக்கட்டாயமாக பழைய ரூட்டுக்கு திருப்பிவிட்டிருக்கார்.
"தர்பார்" படத்தின் முதல் பாதி முழுவதிலும் நயன்தாராவின் அழகில் சொக்கிப் போய் சூப்பர் ஸ்டார் அவரை காதலிக்க துரத்துகிறார். இரண்டாவது பாதியில் நயன்தாரா, சூப்பர் ஸ்டாரை காதலிக்க தொடங்குகிறார். இப்படி தர்பார் படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இல்லாத வேடத்தில் லேடி சூப்பர் நடித்தது ஏன் என தெரியவில்லை.
விஜய் - அட்லி கூட்டணியில் வெளியான பிகில் படத்தில் தனக்கு சொல்லிக்கொள்ளும் படி காட்சிகள் இல்லை என செம்ம அப்செட்டில் இருந்தார் நயன்தாரா. அதையடுத்து சூப்பர் ஸ்டாருடன் நடித்திருந்த தர்பார் படத்தை தான் மிகவும் நம்பியிருந்தார். இப்படி நயனின் கனவில் மண்ணை போட்டுவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ் என ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.