தேசிய விருது பெற்று என்ன புண்ணியம் ! அடுத்த வேலை சோறுக்கு வழி இல்லை! கதறும் அவலம்!

By manimegalai aFirst Published Sep 11, 2018, 1:30 PM IST
Highlights

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான 'ஜோக்கர்' திரைப்படம் அனைவருடைய வாழ்க்கையில் அத்தியாவசிய  தேவைகளில் ஒன்றான 'டாய்லெட்' ஒவ்வொரு வீட்டிற்கும் எவ்வளவு முக்கியம், என்பதை மிகவும் எதார்த்தமாக தன்னுடைய திரைப்படத்தின் மூலம் கூறி இருந்தார் இயக்குனர்.

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான 'ஜோக்கர்' திரைப்படம் அனைவருடைய வாழ்க்கையில் அத்தியாவசிய  தேவைகளில் ஒன்றான 'டாய்லெட்' ஒவ்வொரு வீட்டிற்கும் எவ்வளவு முக்கியம், என்பதை மிகவும் எதார்த்தமாக தன்னுடைய திரைப்படத்தின் மூலம் கூறி இருந்தார் இயக்குனர்.

இந்த படத்தில், 'ஜாஸ்மின்' என்கிற பாடலை பாடிய பாடகர் சுந்தர் ஐயர், சிறந்த பாடகருக்கான தேசிய விருதை பெற்றார். தேசிய விருதை வாங்கும் வரும்போது கூட தான், கடன் வாங்கித்தான் இங்கு வந்ததாக கூறினார்.

இந்நிலையில் அவர் தேசிய விருது பெற்ற பாடகராக இருந்தும் இவருக்கு திரைப்படங்களில் பாட வாய்ப்புகள் கிடைக்க வில்லையாம். அன்றாடம் சாப்பாட்டிற்கு கூட தான்  கஷ்ட பட்டு வந்வதாக கூறி, தான் தேசிய விருது பெற்று எந்த புண்ணியமும் இல்லை என மன வருத்தத்தோடு கூறியுள்ளார் சுந்தரய்யர்.

மேலும்  தனது முகநூலில், திரையுலகை சார்த்த அனைவருக்கும் ஒரு பதிவை அனுப்பியுள்ளார். அதில் "பாட வாய்ப்பு கொடுங்கள் அல்லது வாழ பணம் கொடுங்கள்”  என 200க்கும் மேற்பட்ட, இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் சில முன்னாடி நடிகர்களுக்கும் செய்தி அனுப்பியதாக கூறியுள்ளார். 

ஆனால் இவருடைய துரதஷ்டம், இவருக்கு யாருமே பட வாய்ப்பு கொடுக்கவில்லையாம். அதே போல் இவருடைய ஏழ்மையை கருத்தில் கொண்டு, உதவ யாரும் முன் வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தற்போது யார் என்றே தெரியாத, ஒரு நபர் நான் சொல்லுவதை நம்பி என்னுடைய கஷ்டத்திற்கு 1000 ரூபாய் பணம் அனுப்பியுள்ளதாகவும். மற்றொரு நபர் தன்னுடைய குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்பதாக  கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு வழி காட்டும் தமிழ் திரையுலகம், தேசிய விருது வாங்கிய ஒரு கலைஞர் ஒருவருக்கு கஷ்டத்திலும் கை கொடுக்காமல் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!