கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கம்...! விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு...! 

First Published Jul 22, 2018, 5:37 PM IST
Highlights
no transport charge for agriculture things goverment new rule


சூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் , இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம்  "கடைக்குட்டி சிங்கம்". இந்த படம் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்து கூறும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கார்த்தி இந்த படத்தில் ஒரு விவசாயியாக நடித்துள்ளார். 

இதனால் இந்த படத்திற்கு, அனைத்து விவசாயிகள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது.

இந்த படத்தின் ஒரு காட்சியில், விவசாய நிலத்திலிருந்து அறுவடை செய்யப்பட்ட கத்திரிக்காய்யை சந்தைக்கு எடுத்து செல்ல, பேருந்தை நிறுத்துவார் ஒரு மூதாட்டி. ஆனால் அந்த பேருந்து கத்தரிக்காய் மூட்டைகளை ஏற்றினால் பயணிகள் நிற்க இடம் இருக்காது என்பதால் அந்த மூத்தாட்டியை ஏற்றாமல் செல்லும்.  

பின் நாயகன் கார்த்தி பேருந்தை இடைமறித்து விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி கூறி அந்த பாட்டியை பேருந்தில் விவசாய பொருட்கள் கொண்ட அந்த மூட்டையோடு ஏற்றுவார். 

இதன் பிரதிபலிப்பாக, தற்போது தமிழக அரசு விவசாய பொருட்களை பேருந்தில் இலவசமாக ஏற்றலாம் என்று ஆணை பிறப்பித்துள்ளது. இதனை அறிந்த படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

click me!