
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொய் சொல்லி மாட்டிக்கொண்ட ஜூலி அனைவரிடமும் நான் பொய் சொல்லவில்லை... பிக் பாஸ் எடிட்டர்ஸ் அந்த 5 நொடியை கட் செய்து விட்டார்கள் என கூறி தொகுப்பாளராக களமிறங்கியுள்ள கமலஹாசனையே நெஞ்சில் கை வைத்து பீல் பண்ண வைத்துவிட்டார்.
இவர் ஓவியாவுக்கு பயந்து தற்போது காயத்ரியின் பக்கத்திலேயே படுத்து தூங்கிகிறார் அப்போது இவர் பேசுகையில், நான் பிறந்த 24 வருடத்தில் யாரிடமும் திருடி என்றும், பொய்க்காரி என்றும் பெயர் பெற்றது இல்லை.. கையில் திருட்டு இருக்க கூடாது வாயில் பொய் இருக்க கூடாது என்று தன்னை சொல்லி கொடுத்து வளர்த்தகாவும் ஆனால் இங்கு வந்து அந்த பெயர் வந்து விட்டதாகவும் கூறினார்.
மேலும் நான் அழுகிறேன் என்றால்... அது யாருக்கும் பயந்து அல்ல ஒருவர் அழுவது மூலம் மேலும் மேலும் வலிமை பெறுகிறார் என்று அர்த்தம் என பல வசனங்களை வாரி இறைத்தார்.
ஜூலி ஒரு பக்கம் தன்னை பற்றி பெருமையாக பேசி கொள்ள, வையாபுரியும் ஆரவும், ஜூலி மிகவும் தெளிவாக இருக்கிறாள் காயத்ரிதான் ஜூலியின் நடிப்பில் ஏமார்ந்து போகிறார் என ஜூலியை கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.
ஓவியா அனைவருடனும் பேச முயற்சி செய்தும் அவளை தான் அனைவரும் ஒதுக்கி வருவதாகவும் ஓவியாவிற்கு சப்போர்ட் செய்து இருவரும் பேசுகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.