எதுவுமே எக்ஸ்ட்ரா கூடாது !! பட்டையைக் கிளப்பிய ரஜினிகாந்த் !!

By Selvanayagam PFirst Published Dec 10, 2018, 6:57 AM IST
Highlights

எக்ஸ்ட்ரா பேசக்கூடாது.. எக்ஸ்ட்ரா சாப்பிடக்கூடாது… எக்ஸ்ட்ரா நடக்கக் கூடாது… எக்ஸ்ட்ரா சிந்திக்கக் கூடாது … எக்ஸ்ட்ரா புகழக்கூடாது… எல்லாம் அளவோடு இருந்தால் எதுவுமே நல்லது என்று நடிகர் ரஜினிகாந்த் பேட்ட பட இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சசிகுமார், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, திரிஷா, பீட்டர் ஹெய்ன், மாளவிகா மேனன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்றுப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் அனைவரும் கைகோர்ப்போம் என தெரிவித்தார்.

2.0 படத்திற்கு உலகளவில் பெரிய வெற்றி கிடைச்சுருக்கு. படத்தை வெற்றி பெற வைத்த அனைத்து மக்களுக்கும் நன்றி. 2.0 வெற்றி, அதற்கான பாராட்டு இயக்குநர் ஷங்கர், தயாரிப்பு நிறுவனத்திற்கு உரியது. அந்த படத்தில் வேலை செஞ்ச தொழில்நுட்ப கலைஞர்களை பாராட்டினால் பத்தாது என கூறினார்.

எந்திரன்  படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டதே கலாநிதி மாறன் தான்.அந்த படத்தை முடிக்க முடியாம தவிச்ச போது, கலாநிதி தான், எனக்காகவும், ஷங்கருக்காகவும் அந்த படத்தை வாங்கி தயாரித்தார். அந்த படம் வெற்றியடைஞ்ச பிறகும் எனக்கு ரூ.1 கோடி ரூபாய் கொடுத்தார். 2.0 படம் எடுக்க முடிவு செய்த போது, சன் பிக்சர்ஸ் தயாரிக்க முடியாததால் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்தது.

திரும்பவும் தயாரிப்பில் இறங்கிய பிறகு படம் பண்ணலாம்னு சொன்னாங்க. மகிழ்ச்சி, பண்ணலாம்னு சொன்னேன். சில இயக்குநர்களிடம் கதை கேட்டோம். எதுவும் செட்டாகவில்லை. அப்போ கார்த்திக் ஒரு கதை சொன்னது ஞாபகம் வந்தது. அவரிடம் பேசினோம். அவரிடம் கேட்ட போது எனக்கு ரொம்ப பிடிச்சது. அதை தயாரிப்பாளரிடம் சொல்ல சொன்னேன். பின்னர் தான் படம் ஓகே ஆச்சு. 

பேட்ட படத்தை தமிழ்நாட்டில் எடுக்க முடியாது. அன்பு தொல்லை. வெளி மாநிலத்தில் பண்ணோம். கார்த்திக் என்னுடைய மிகப்பெரிய ரசிகர். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து எடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர் எப்போதுமே எக்ஸ்ட்ரா பேசக்கூடாது.. எக்ஸ்ட்ரா சாப்பிடக்கூடாது… எக்ஸ்ட்ரா நடக்கக் கூடாது… எக்ஸ்ட்ரா சிந்திக்கக் கூடாது … எக்ஸ்ட்ரா புகழக்கூடாது… எல்லாம் அளவோடு இருந்தால் எதுவுமே நல்லது என்று பேசி ரசிகர்களிடம் கைதட்டல் வாங்கினார்.

click me!