நடிகர் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், சென்னையில் அப்படத்திற்கு பெரியளவில் கொண்டாட்டங்கள் இல்லை.
நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. கோட் படத்தின் முதல் காட்சி தமிழ் நாட்டில் 9 மணிக்கு தான் திரையிடப்பட்டது. அதற்கு முன்னதாகவே கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்காட்சிகள் திரையிடப்பட்டு அப்படத்தின் விமர்சனங்களும் வெளியான வண்ணம் உள்ளன. படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்களே கிடைத்து வருகிறது.
கோட் திரைப்படத்தின் முதல் காட்சி தமிழ்நாட்டில் இன்று காலை 9 மணிக்கு தான் திரையிடப்பட்டது. வழக்கமாக விஜய் படம் ரிலீஸ் ஆனால் திரையரங்குகள் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். ரசிகர்கள் அதிகாலையிலேயே தியேட்டர் முன் குவிந்து ஆடிப்பாடி, பட்டாசு வெடித்து, விஜய்யின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்து மகிழ்வதுண்டு. ஆனால் கோட் படத்திற்கு சென்னையில் பெரியளவில் கொண்டாட்டங்கள் இல்லை.
undefined
குறிப்பாக சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கில் ஒன்றான ரோகிணி தியேட்டரில் கொண்டாட்டங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. ரசிகர்களின் கோட்டை என்று கூறப்படும் இந்த தியேட்டரிலேயே இந்த நிலைமையா என்று நெட்டிசன்கள் ஷாக் ஆகி உள்ளனர். அங்கு பாதுகாப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.
கோட் FDFS - கொண்டாட்டம் இன்றி வெறிச்சோடிய ரோகினி தியேட்டர் pic.twitter.com/n9bOe8jHm8
— Asianetnews Tamil (@AsianetNewsTM)இதையும் படியுங்கள்... GOAT Review : தளபதி விஜய் சாதித்தாரா? சோதித்தாரா? கோட் படத்தின் விமர்சனம் இதோ
அதேபோல் சென்னையில் உள்ள மற்றொரு பிரபல திரையரங்கமான கமலா தியேட்டரிலும் எந்தவித கொண்டாட்டமும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. விடுமுறை இல்லாத நாளில் ரிலீஸ் ஆகி உள்ளதால் தான் கோட் படத்திற்கு கூட்டமில்லை என்றும் கூறப்படுகிறது.
கோட் FDFS - ரசிகர்கள் கொண்டாட்டமின்றி காத்துவாங்கும் கமலா தியேட்டர் pic.twitter.com/SyTmlbCMFg
— Asianetnews Tamil (@AsianetNewsTM)அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் கோட் திரைப்படத்தின் சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட்ட நிலையில், முக்கிய திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. கூட்டத்தை கட்டுபடுத்தவும், அசாம்பாவிதங்களை தவிர்க்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உதவி ஆணையர்கள் மேற்பார்வையில், 3 காவல் ஆய்வாளர்கள் தலையில், 6 உதவி ஆய்வாளர்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஒவ்வொரு திரையரங்கிலும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்... தளபதி விஜய்யின் டாப் 10 ஹிட் மற்றும் பிளாப் படங்கள் லிஸ்ட் இதோ