
சின்னத்திரையில், பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நிலானி. இவர் தற்போது குன்னூரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டெர்லைட் பிரச்சனை:
தூத்துகுடியில், ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வேண்டும் என்று, தூத்துக்குடியை சேர்ந்த மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர், 100 நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
இவர்களுடைய போராட்டத்திற்கு, தமிழக அரசு, மற்றும் மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்காததால், அறவழி போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் ஒரு மாணவி உட்பட 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு பிரபலங்கள் மட்டும் இன்றி பலர் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்தனர். அதே போல் பல அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர் விஜய், ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள், இந்த துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்தவர்களையும், இறந்தவர்கள் குடும்பத்தையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.
மேலும் இந்த துப்பாக்கி சூட்டிற்கு எதிராக, பிரபல சின்னத்திரை நடிகை, நிலானி போலீஸ் உடை அணிந்தபடி ஒரு வீடியோவை வெளியிட்டார்.
இந்த வீடியோவில் அவர்..." நம் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் வேதனை அளிக்கிறது என்றும், அமைதியான வழியில் போராடுகிறோம். நான் தற்போது சூட்டிங்கில் இருக்கிறேன், இல்லை என்றால் தூத்துக்குடி சென்று போராட்டத்தில் பங்கேற்றிருப்பேன். இந்த காவலர் உடையை அணிந்திருப்பது தனக்கு உடல் கூசுகிறது என்று தெரிவித்தார்.
இவர் போலீஸ் உடையில் இதுபோன்ற, அவதூறு கருத்து பரப்பியதாக ஒருவர், வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் இவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் இன்று, குன்னூரில் வைத்து சின்னத்திரை நடிகை நிலானியை கைது செய்தனர். இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.