ரூ.50 கோடியில் பிரமாண்ட பங்களா! 36 வயது நடிகைக்கு 26 வயது பாடகர் பரிசு!

Published : Oct 27, 2018, 03:13 PM IST
ரூ.50 கோடியில் பிரமாண்ட பங்களா! 36 வயது நடிகைக்கு 26 வயது பாடகர் பரிசு!

சுருக்கம்

திருமண பரிசாக பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனாசுக்கு எதை வழங்க போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் நிக் ஜோனாஸ் தனது காதல் மனைவிக்கு சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களாவை பரிசாக அளிக்க உள்ளார்.

ரூ.50 கோடி ரூபாய் மதிப்பிலான பிரமாண்ட பங்களாவை தனது காதலியான 36 வயது நடிகைக்கு 26 வயதே ஆன பாடகர் பரிசளிக்க உள்ளார். தமிழில் விஜயுடன் தமிழன் திரைப்படத்தில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. உலக அழகி பட்டம் வென்று தமிழில் அறிமுகமாகி பின்னர் இந்தியில் வெற்றிக் கொடி நாட்டியவர் இவர். தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார்.

 

36 வயதான பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் தங்கியிருந்த போது 26 வயதே ஆன நிக் ஜோனாஸ் எனும் பாடகருடன் அறிமுகம் ஏற்பட்டது. நண்பர்களாக இருவரும் பழகி வந்த நிலையில் பின்னர் காதலர்கள் ஆகினர். இதனை தொடர்ந்து அடுத்த மாதம் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனாஸ் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தடல்புடலாக நடைபெற்று வருகிறது. 

திருமண பரிசாக பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனாசுக்கு எதை வழங்க போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் நிக் ஜோனாஸ் தனது காதல் மனைவிக்கு சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களாவை பரிசாக அளிக்க உள்ளார். அமெரிக்காவின் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் சுமார் 4 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள சொகுசு பங்களாவில் தான் திருமணத்திற்கு பிறகு பிரியங்கா சோப்ராவும் – நிக் ஜோனாசும் குடியேற உள்ளனர். 

இதனை முன்னிட்டு அந்த வீட்டை விலைக்கு வாங்கியுள்ள நிக் ஜோனாஸ் அதனை பிரியங்கா பெயரில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 26 வயதே ஆன நிலையில் தனது 36 வயது காதலிக்கு நிக் ஜோனாஸ் 50 கோடி ரூபாய்க்கு பிரமாண்ட பங்களாக வாங்கியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி