
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொய் சொல்லி மாட்டிக்கொண்டபின் அழுதுக்கொண்டே இருந்த ஜூலி தற்போது தன்னுடைய சுயரூபத்தை காட்ட தொடங்கியுள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில் ஜூலி மிகவும் திமிராக பேசுகிறார்... அதில் இதனை நாள் என்னை அழுகாச்சி மூஞ்சியாகவே தான் பார்த்துருப்பீங்க ஆனா நான் அப்படி இல்லை நான் வந்து வேற என சொல்லி மிகவும் சத்தமாக சிரிக்கிறார்.
மேலும் நான் அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருக்கணும், அடுத்த வாரம் நான் தலைவர் போட்டிக்கு நிற்கிறேன் என தன்னுடைய சுயரூபத்தை காட்டுகிறார்.
இவர் வெளியில் சினேகனிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த, ஆரவ் வையாபுரியிடம் ஜூலி சீன் ஜோடிக்க ஆரம்பித்து விட்டாள் என்றும் தன்னிடம் ஆரவ் நீ வெளியில வா உன்னை அங்க வைத்துதான் செய்யணும் என்று ரவுடி போல பேசியதாக கூறிய காட்சிகளின் இன்றைய ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.