
கொரோனாவின் இரண்டாவது அலை, அதிக அளவில் பரவி வரும் நிலையில், தமிழக அரசு ஏற்கனவே கொரோனாவை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகளை, கொண்டு வந்த நிலையில், தற்போது வரும் 26 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா சற்று தணிந்தது என்று, பெருமூச்சு விட்ட மக்களை, மீண்டும் தன்னுடைய இரண்டாவது அலையை தொடர்ந்து கொடூர முகத்தை காட்டி அச்சுறுத்தி வருகிறது கொரோனா. கொரோனாவால் தமிழகத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. அதே போல், பலி எண்ணிக்கைகளை உயர்ந்து வருகிறது. மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஆச்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதால், அதையும் சரி செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி , சுற்றுலா தளங்களுக்கு மூடப்பட்டும், திருமணங்கள் போன்ற விஷேஹங்களுக்கு 100 நபர்கள் மட்டுமே அனுமதி, இறுதி சடங்குகளுக்கு 50 பேர் மட்டுமே அனுமதி போன்ற கட்டுப்பாடுகளை அரசு விதித்திருந்த நிலையில், தற்போது மேலும் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
குறிப்பாக, கடந்த 7 மாதங்களாக மட்டுமே இயங்கி வந்த திரையரங்குகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் உடல்பயிற்சி கூடங்கள், அரங்குகள், பார்க் போன்றவை இயக்க அனுமதி அமறுக்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள், தேநீர் கடைகள் போன்ற வற்றில் பார்சல்கள் மட்டுமே கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனியார் மற்றும் அரசு பேருந்துகளில், இருக்கையில் அமர்ந்தபடி மட்டுமே பயணிக்க அனுமதி அளித்தும்ம், நின்று கொண்டு பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த வருடத்தில் இருந்து, திரை துறை கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் திரையரங்குகள் இயங்காமல் போகும் சூழல் உருவாகியுள்ளதால், தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கில் வேலை செய்யும் நபர்களின் வாழ்வாதாரம் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.