சொந்த அண்ணனையே காதலன் மூலம் கூலிப்படையை ஏவி கொடூரமாக கொலை செய்த நடிகை..! பகீர் காரணம்..!

Published : Apr 24, 2021, 04:35 PM IST
சொந்த அண்ணனையே காதலன் மூலம் கூலிப்படையை ஏவி கொடூரமாக கொலை செய்த நடிகை..! பகீர் காரணம்..!

சுருக்கம்

பிரபல நடிகையும், மாடலுமான ஷானயா என்பவர் தன்னுடைய சொந்த அண்ணனையே, காதலன் மூலம் கூலிப்படையை ஏவி கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.   

பிரபல நடிகையும், மாடலுமான ஷானயா என்பவர் தன்னுடைய சொந்த அண்ணனையே, காதலன் மூலம் கூலிப்படையை ஏவி கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. 

மேலும் செய்திகள்: வித்தியாசமான கெட்டப்பில்... உடல் தெரியும் உச்சகட்ட கவர்ச்சியில் ஹாட் போட்டோ ஷூட் நடத்திய ஸ்ருதி ஹாசன்!
 

பாலிவுட் நடிகை ஷானயா கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி, வெளியாக இருந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிக்காக ஹப்பல்லிக்கு சென்றுருந்தார். அன்றைய தினம் தான், அவருடைய அண்ணன் ராகேஷின் கொலை சம்பவம் நடந்துள்ளது. ராகேஷ் கழுத்தை நெரித்து கொலை செய்த, ஷானயாவின் காதலர் ஏற்பாடு செய்த கூலிப்படை ஆட்கள், பின்னர் அவரது, தலை, கால், கை என அனைத்து உடல் பாகங்களையும் வெவ்வேறு இடத்தில் போட்டு விட்டனர்.

இந்நிலையில் ராகேஷ் கொலை தொடர்பாக, ஷானயாவின் காதலர்... நியாஸ் அகமத் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியானது. நியாஸ் அகமத், நடிகை ஷானயாவிடம் மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. இதுகுறித்து அறிந்த ஷானயாவின் சகோதரர், ராகேஷ் இருவரையும் எச்சரித்தது மட்டும் இன்றி காதலை எதிர்த்துள்ளார்.

மேலும் செய்திகள்: 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இருந்து விலகுகிறாரா முக்கிய நடிகர்..? பரபரப்பு தகவல்..!
 

இதன் காரணமாக ஷானயா தன்னுடைய காதலன் மூலம் கூலிப்படையை ஏவி,  சொந்த சகோதரனையே கொலை செய்ய திட்டமிட்டார். அதன் படி, ஷானயா பட ப்ரோமோஷனுக்கு சென்ற நேரத்தில் அவர் மீது சந்தேகம் ஏற்படாதவாறு இந்த கொலையை செய்துள்ளனர். ஆரம்பத்தில் ஷானயா மற்றும் அவர் காதலர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவில்லை என்றாலும், பின்னர் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே இவர்கள் மீது சந்தேகம் போலீசாருக்கு வந்தது.

மேலும் செய்திகள்: உருகுதே... மருகுதே... உன்ன பார்த்ததால! குட்டை உடையில் கொஞ்சல்ஸ்.. குழந்தையாகவே மாறிய அனுபமா பரமேஸ்வரன்!
 

தற்போது நடிகை உட்பட 5 பேரை கைது செய்துள்ள போலீசார். 3 பேரை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. காதலுக்காக தனது சொந்த அண்ணனையே கூலிப்படையை வைத்து கொலை செய்த பிரபல நடிகை ஒருவரின் வெறிச்செயல் பாலிவுட் திரையுலகினரையே அதிர வைத்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!
ஸ்வீட் எடு கொண்டாடு: எலிமினேஷனில் இருந்து கிரேட் எஸ்கேப்: பாரு ஹேப்பி அண்ணாச்சி!