'அண்ணாத்த' படத்தில் இணைந்த புதிய நடிகர்!

Published : Mar 16, 2021, 07:41 PM IST
'அண்ணாத்த' படத்தில் இணைந்த புதிய நடிகர்!

சுருக்கம்

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில், பிரபல நடிகர் ஜெகபதி பாபு இணைந்துள்ள தகவலை சன் பிச்சர்ஸ் நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

​​'தர்பார்' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ''அண்ணாத்த''. இதில் நடிகை குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

இந்த படத்தின் முதல் இரண்டு கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில்,  உலகம் முழுவதையும் உச்சகட்ட அச்சத்தில் வைத்துள்ள கொரோனா பீதியால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே படப்பிடிப்பிற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் திரைப்பட ஷூட்டிங்கிற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. 

எனவே டிசம்பர் 15ம் தேதி, பல்வேறு பாதுகாப்புகளுக்கு மத்தியில் மீண்டும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு துவங்கியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "அண்ணாத்த" படப்பிடிப்பில்  கலந்து கொள்வதற்காக சென்னை டூ ஐதராபாத் தனி விமானத்தில் பறந்து சென்று, ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்.

உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படக்குழுவினர், அண்ணாத்த படக்குழுவில் கலந்து கொண்ட போதிலும் படக்குழுவினர் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, நடிகர், நடிகைகள் அனைவரும் சென்னை திரும்பினர். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டாலும், ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மூன்று நாட்கள் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.

இதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின், நேற்றைய தினம் சென்னையில் 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. 30 நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், முடிந்தவரை விரைவில் படப்பிடிப்பை முடித்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு தயாராகி வருகிறது படக்குழு. மேலும் வரும் தீபாவளிக்கு 'அண்ணாத்த' ரிலீஸ் ஆகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில், பிரபல நடிகர் ஜெகபதி பாபு இணைந்துள்ள தகவலை சன் பிச்சர்ஸ் நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தன்னுடைய திரையுலக கதாநாயகன் அஜித் குமாரை சந்தித்த நடிகர் சிம்பு!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!