கொரோனா தொற்றுடன் படப்பிடிப்பிற்கு வந்த பிக்பாஸ் பிரபலம்! FIR பதிவு செய்த போலீசார்!

Published : Mar 16, 2021, 01:04 PM IST
கொரோனா தொற்றுடன் படப்பிடிப்பிற்கு வந்த பிக்பாஸ் பிரபலம்! FIR பதிவு செய்த போலீசார்!

சுருக்கம்

கொரோனா தொற்றுடன், படப்பிடிப்பில் கலந்துகொண்ட பிக்பாஸ் பிரபலத்தின் மீது போலீசார் அதிரடியாக எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கொரோனா தொற்றுடன், படப்பிடிப்பில் கலந்துகொண்ட பிக்பாஸ் பிரபலத்தின் மீது போலீசார் அதிரடியாக எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் தலைதூக்கிய கொரோனா தாக்கம் சற்று ஓய்ந்த நிலையில் மீண்டும் கடந்த சில மாதங்களாக அதிகரிக்கத் துவங்கி உள்ளது. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் கவுஹர் கான், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், சில படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  எனவே இவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் விதிமுறைகளை பின்பற்றாத கவுஹர் கான் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இவர் மீது ஓஷிவாரா காவல் நிலையத்தில், மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். கொரோனா இருப்பது, தெரிந்தும் முழுமையாக குணமடைய முன் வெளியிடங்களுக்கு வந்து மற்றவர்களுக்கு கொரோனா தொற்றை பரப்பும் விதத்தில் கவுஹர் கான் நடந்து கொண்ட விதத்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நிவேதா பெத்துராஜ் - ரஜித் திருமணம் நிறுத்தம்? இன்ஸ்டாவில் போட்டோஸை நீக்கியதால் டவுட்டோ டவுட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஹைலைட்ஸ்: ராஜீ முதல் தங்கமயில் வரை இன்றைய அப்டேட்ஸ்!