வொயில்ட் கார்டு என்ட்ரி மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளே சென்ற வேகத்திலேயே வெளியே வந்த கஸ்தூரியை மானாவாரியா கலாய்த்து தள்ளுகிறது நெட்டிசன்கள்.
வொயில்டு கார்டு என்ட்ரி மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளே சென்ற வேகத்திலேயே வெளியே வந்த கஸ்தூரியை மானாவாரியா கலாய்த்து தள்ளுகிறது நெட்டிசன்கள்.
நெல்லையில் நடைபெற்ற டி.வி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகை கஸ்தூரி, சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இன்றைய சமூகத்தில், இரவு நேரத்தில் தனியாகப் பெண் குழந்தைகளை கடைகளுக்குக்கூட அனுப்ப முடியாத சூழ்நிலை உள்ளது. நகரமயமாதல், இடம்பெயர்தல் உட்பட, சாப்பாடு வேண்டுமென்றால்கூட தமிழகத்தில் ஹிந்தியில்தான் கேட்க வேண்டும் என்ற நிலைமைக்கு தமிழகம் மாறிவிட்டது. பெண்கள், தம் பாதுகாப்புக்கு மிக அதிக முயற்சிகள் எடுக்கவேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம்.
undefined
அதற்கென்று, தனியாக மாநில பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது, சமூகப் பொறுப்பான நிகழ்ச்சி அல்ல. அதில் பங்கேற்றவர்கள் முழுவதுமே சினிமா, நாடகக் கலைஞர்கள், பிரபலங்கள் மட்டும்தான். டி.வி நிகழ்ச்சி என்பது பொறுப்புள்ள பொழுதுபோக்காக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. மக்களை ஒரு சிறிய வட்டத்திற்குள்ளாகவே சிக்க வைக்கும் நோக்கத்துடன் இது போல நிகழ்ச்சிகளின் போக்காக இருக்கிறது.
தவறான விஷயங்களைச் சொல்வதனால் மட்டுமே இங்கு பிரபலம் ஆகிறது என்று கலைஞர்கள் நினைத்தால், அது உண்மையில் தவறான ஒன்று. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், நடிகர் கமலுக்கு ஒதுக்கப்பட்டது எல்லாம் பேச்சளவில் அவருக்கு ஒதுக்கப்பட்டது. இனி வரும் நிகழ்ச்சிகள் பொழுதுபோக்குடன் சேர்ந்து பொறுப்பாகவும் இருக்க வேண்டும். பெண்களுடைய மதிப்பைக் குறைத்து மதிப்பிடும் நிகழ்ச்சியாகத் தான் இந்த வருட நிகழ்ச்சி அமைந்துவிட்டது என்பதுதான் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறியுள்ளார் .
கஸ்தூரியை இந்த பேட்டியை பார்த்த நெட்டிசன்கள், ஏம்மா நீங்க உள்ளே போயி போனியாகமா போன வேகத்துல வந்துட்டீங்க, இது பேச்சப்பாரு. ட்விட்டரில் சீன போட்ட, நீ ஒரு ஆளுன்னு, உன்னால டிஆர்பி எகிறும்னு ஒன்றரை லட்சம் சம்பளம் ஏமாற்றி வாங்கிகிட்டு இப்போ அந்த விஜய் டிவியை தப்பு தப்பா பேசுறியே இதுதான் உன் நன்றியா? இது வெறும் வாயி உதாரு உனக்கு சாண்டி கவின் கேங் தான் சரிபட்டு வரும், அவங்க கலாய் பத்தலையா? என வெளுத்து வாங்குகிறது கஸ்தூரியை.