வருந்தி மன்னிப்பு கேட்ட 'கேங்'...! மதுமிதா கணவர் போட்ட ட்விட்!

Published : Oct 13, 2019, 01:02 PM IST
வருந்தி மன்னிப்பு கேட்ட 'கேங்'...! மதுமிதா கணவர் போட்ட ட்விட்!

சுருக்கம்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ரசிகர்களின் நன்மதிப்பை பெற்று விளையாடிய பிரபலங்களில் ஒருவர் பிரபல காமெடி நடிகை மதுமிதா. 

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ரசிகர்களின் நன்மதிப்பை பெற்று விளையாடிய பிரபலங்களில் ஒருவர் பிரபல காமெடி நடிகை மதுமிதா. 

பிக்பாஸ் வீட்டின் விதியை மீறும் விதமாக, இவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதால், திடீர் என பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது, இந்த வீட்டில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளவர்கள் கஸ்தூரி, சேரன் என இருவருடைய பெயரை சொல்லி விட்டு, மற்றவர்கள் யாரிடமும் பேச தனக்கு சற்றும் விருப்பம் இல்லை என தெரிவித்தார்.

இவர் வெளியேற முக்கிய காரணம் நடிகை ஷெரின் தான் என கஸ்தூரி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். மதுமிதா காவிரி பிரச்சனை குறித்து பேசியதற்கு, ஷெரின் மற்றும் அணைத்து  பிரபலங்களுக்கும் அவருக்கு எதிராக திரும்பியதால், கோவத்தில் கத்தியால் கைகளை கிழித்து கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார் மதுமிதா என்பது நாம் அறிந்தது தான்.

இது ஒரு புறம் இருக்க, பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து விட்டதால் தற்போது அனைத்து போட்டியாளர்களும் அவரவர் வேளையில் கவனம் செலுத்த துவங்கி விட்டனர். 

இந்நிலையில் தங்களுடைய தவறை உணர்ந்து, இவர்கள் மன்னிப்பு கேட்டுள்ளதாக தெரிகிறது. இதனை தெரிவிக்கும் விதமாக மதுவின் கணவர் மோசஸ் ’.... கேங் மனம் திருந்தி வருந்தி கேட்டுக்கொண்டதால்...பரவிக்கிடக்கும் அவர்களின் மணத்தைப் பற்றி தயவுசெய்து யாரும் பேச வேண்டாம் மீண்டும் மணம் வீசினால் பார்ப்போம்’ ட்விட் செய்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!