ஜெயிலுக்கு போயும் அடங்காத மீரா மிதுன்... பெயில் வாங்க சொன்ன காரணத்தால் கடுப்பான நெட்டிசன்கள்!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 18, 2021, 08:05 PM IST
ஜெயிலுக்கு போயும் அடங்காத மீரா மிதுன்... பெயில் வாங்க சொன்ன காரணத்தால் கடுப்பான நெட்டிசன்கள்!

சுருக்கம்

ஜாமீன் கோரி மீரா மிதுன் தாக்கல் செய்துள்ள மனுவில் அவர் குறிப்பிட்டுள்ள காரணம் நெட்டிசன்களை கடுப்பேற்றியுள்ளது. 

நடிகை மீரா மிதுன் எப்போதுமே சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர். தன்னை ஒரு சூப்பர் மாடல் என சொல்லிக்கொண்டு, தேவையில்லாமல் பல விஷயங்களில் மூக்கை நுழைத்து நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார்.  சமீபத்தில் பட்டியலின இயக்குனர்கள் சினிமாவை விட்டே வெளியேற வேண்டும் என்பது போன்ற அவதூறு கருத்தை வெளியிட்டு வீடியோ ஒன்றை மீரா மிதுன் தன்னுடைய யூ-டியூப் பக்கத்தில் வெளியிட, இவரது பேச்சுக்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் இருந்து கண்டனங்கள் குவிந்தது. 

பின்னர் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த வன்னியரசு கொடுத்த புகாரின் அடிப்படையில், மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இது குறித்து விசாரணை செய்ய மீராமிதுன் சம்மன் அனுப்பிய நிலையில் அவர் போலீசில் ஆஜராகாமல் தலைமறைவானார். மீண்டும் தன்னுடைய திமிர் பேச்சை அவிழ்த்து விட்டு என்னை யாரும் கைது செய்ய முடியாது போலீசாருகே சவால் விட்டார். இந்த வீடியோ வைரலாக பரவி இவருக்கு எதிரான கண்டனங்கள் அதிகமான நிலையில், தலைமறைவாக இருந்த மீரா மிதுனை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து தமிழக போலீசார் கைது செய்து, சென்னை கொண்டு வந்தனர்.  இவருக்கு வீடியோ எடுத்து உதவி செய்த இவரது ஆண் நண்பர் அபிஷேக் ஷாம் என்பவரையும் கைது செய்தனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீராவை வரும் 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீராமிதுனிடம் தொடர்ந்து  விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜாமீன் கோரி மீரா மிதுன் தாக்கல் செய்துள்ள மனுவில் அவர் குறிப்பிட்டுள்ள காரணம் நெட்டிசன்களை கடுப்பேற்றியுள்ளது. 

அதாவது மீரா மிதுன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனுவில், பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
 இதை கேட்ட நெட்டிசன்கள் பலரும் தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொண்டது போதாது என?, ஜாமீன் கேட்கும் போது கூட பந்தாவுடன் பல படங்களில் காமிட்டாகியுள்ளதாக பப்ளிசிட்டி தேடுவதாக மீரா மிதுனை கழுவி ஊற்றி வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?