
தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'வலிமை' திரைப்படம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட நிலையில், அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது, அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க உள்ள இசையமைப்பாளர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அஜித் 'வலிமை' படத்தில் நடித்து முடித்த கையேடு மீண்டும், எச்.வினோத் இயக்கத்திலேயே நடிப்பார் என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து தற்போது வரை, படக்குழு தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்றாலும், 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இறுதி கட்டத்தில் உள்ள, அஜித்தின் 'வலிமை' கடைசி கட்ட படப்பிடிப்புக்காக ரஷ்யா செல்ல உள்ளதாகவும், ஒரு வாரம் அங்கு படப்பிடிப்பை முடிந்து கொண்டு சென்னை வர உள்ளதாகவும் கூறப்பட்டது.
இது ஒரு புறம் இருக்க தற்போது அஜித்தின் 61 ஆவது படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அதாவது அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரன் தான் இசையமைக்க உள்ளாராம். இந்த தகவல் அஜித் ரசிகர்களை செம்ம குஷியாகி உள்ளது. தற்போது அஜித் நடித்து வரும் படத்திற்கு இசையமைப்பாளர் 'யுவன்' இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.