வாய் பேசுனா மட்டும் போதுமா? #வரிகட்டுங்க_சூரியா... கொஞ்சம் ஓவராக விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 17, 2021, 9:26 PM IST
Highlights

#வரிகட்டுங்க_சூரியா என்ற ஹேஷ்டேக்குடன் சூர்யா இதற்கு முன்னதாக நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்ததை பதிவிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர். 

நடிகர் சூர்யா வீட்டில் கடந்த 2010 ம் ஆண்டு அக்டோபர் மாதம் வருமான வரி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 2007-2008 ம் ஆண்டு மற்றும் 2008-2009 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான வரியை மதிப்பீடு செய்து 2011 ம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து வருமானவரித்துறை தீர்ப்பாயத்தில் சூர்யா தரப்பிலும்,வருமான வரி தரப்பிலும்  மனுக்கள் தாக்கல்  செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த மேல்முறையீட்டு தீர்ப்பாயம், 2007-08, 2008-09 ம் ஆண்டுளுக்கு 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்ற வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரியின் உத்தரவை உறுதி செய்தது. இந்நிலையில், தீர்ப்பாயத்தில் தனது வழக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு முடிவு காணப்பட்டதால், வருமான வரிக்கு சட்டப்படி மாதம் 1 சதவீதம் வட்டி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரி கடந்த 2018 ம் ஆண்டு நடிகர் சூர்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார். தான் முறையாக வரி செலுத்தி வருவதாகவும், தீர்ப்பாய கால தாமதத்திற்கு வருமானவரித் துறையே காரணம் என்பதால் வருமான வரி சட்டப்படி, வட்டி விலக்கு பெற தனக்கு உரிமை உள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

நீ பேசுன பேச்சுக்கு...
பண்ணுன உதவிக்கு...
கருத்தயெல்லாம் கேட்டு நல்லா மனுசன்னு நினைச்சனே ரங்கா... நீ போய் இப்படி எல்லாம் பண்ணலாமா..!! pic.twitter.com/q5o0FePf7H

— சைக்கிள் கபிலன் (@Kabilantwits)

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்த போது, சோதனை நடந்த 45 நாட்களுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் ஆனால் சூர்யா தாமதமாக தான் கணக்கை தாக்கல் செய்தார் எனவும், வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூர்யா முழு ஒத்துழைப்பு தரவில்லை எனவும், சோதனைக்கு பிறகு வருமானம் குறித்த முழு விவரங்களை அளிக்கவில்லை என்பதால், வருமான வரி சட்டப்படி, வட்டி விலக்கு பெற சூர்யாவுக்கு உரிமை இல்லையென வருமான வரி தரப்பில் வாதிடப்பட்டது.

ஏழைகளிடம் இருக்கும் நேர்மையும் உண்மையும் இது போன்ற சில பெரிய நடிகர்களிடம் இல்லாமல் இருப்பது வேதனையாக உள்ளது.

அப்படி ஏமாற்றி போகும் போது என்னடா கொண்டு போகப் போறீங்க? pic.twitter.com/d6xWANe3zt

— குமார் ஐயந்துரை❤️ (@Kumariyandurai1)

வருமானவரித்துறையின் இந்த வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதி, நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதற்கு முன்னதாக விஜய், தனுஷ் ஆகியோர் சொகுசு கார் வழக்கில் வரி விலக்கு கேட்ட போது பல்வேறு கருத்துக்களை கூறிய நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தான் சூர்யா வழக்கிலும் தீர்ப்பளித்துள்ளார். இதையடுத்து நெட்டிசன்கள் வழக்கம் போல் ஹேஷ்டேக் ட்ரெண்டிக்கில் இறங்கிவிட்டனர். #வரிகட்டுங்க_சூரியா என்ற ஹேஷ்டேக்குடன் சூர்யா இதற்கு முன்னதாக நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்ததை பதிவிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர். #வரிகட்டுங்க_விஜய்,  #வரிகட்டுங்க_தனுஷ் என்ற வரிசையில் தற்போது #வரிகட்டுங்க_சூரியா என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டிங்கில் இணைந்துள்ளது. சூர்யா ரசிகர்களோ வழக்கு எதற்காக தொடரப்பட்டது என்பதைக் கூட முழுமையாக ஆராயாமல், தேவையில்லாத விமர்சனங்களையும், சூர்யா செய்த நல்ல காரியங்களையும் கொச்சைப்படுத்துவதாக கொந்தளிப்பில் உள்ளனர்.

click me!