காமெடி நடிகர் ரோபோ சங்கரின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டு..!

Published : Aug 17, 2021, 08:08 PM IST
காமெடி நடிகர் ரோபோ சங்கரின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டு..!

சுருக்கம்

இந்நிலையில் இவர் கவலையில் இருப்பவர்களை சிரிக்க வைக்க எடுத்துள்ள, புதிய முயற்சிக்கு பலரும் தங்களுடைய பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சின்னத்திரையில் ஒரு ஸ்டேஜ் பர்ஃபார்மாராக அறிமுகமாகி, பின்னர் மெல்ல மெல்ல தன்னுடைய திறமையால் இன்று வெள்ளித்திரையில் முன்னணி காமெடி நடிகராக வளர்ந்து இருப்பவர் ரோபோ சங்கர். அஜித், தனுஷ், என முன்னணி நடிகர்களின் படத்தில் தன்னுடைய காமெடியால் தூள் கிளப்பி வருகிறார். இந்நிலையில் இவர் கவலையில் இருப்பவர்களை சிரிக்க வைக்க எடுத்துள்ள, புதிய முயற்சிக்கு பலரும் தங்களுடைய பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

எப்போதுமே தன்னுடைய தனித்துவமான கலையை, பலர் முன்னும் காண்பித்து, அவர்களை மகிழ்விப்பதில் உள்ள ஆனந்தமே தனி. அதை தான் தற்போது ரோபோ ஷங்கர் செய்து வருகிறார். இவர் ஏற்கனவே கொரோனா முதல் அலையின் போது, உளைச்சலில் இருந்த அரசு அலுவலகங்களுக்கும், முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும், சென்று தன்னுடைய கலகலப்பான பேச்சால் மற்றவர்களை மகிழ்வித்து சிரிக்க வைத்தார்.

இதை தொடர்ந்து, இந்த பணியை சுதந்திர தினத்தன்று மீண்டும்  கையில் எடுத்திருக்கிறார். ஆனால் இம்முறை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு செல்லாமல், சிறுவர் சீர்திருத்த பள்ளி, மற்றும் சிறையில் உள்ளவர்களை சந்தித்து சிரிக்க வைக்கும் முயற்சியில் இறங்க உள்ளார்.

முதற்கட்டமாக தஞ்சாவூரில் உள்ள சீர்திருத்த பள்ளிக்கு சென்று அங்கிருந்த மாணவர்களிடம், தன்னுடைய நகைச்சுவையான பேச்சு மூலம் விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளார். ரோபோ சங்கரின் இந்த புதிய முயற்சிக்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளையும், வரவேற்பையும் தெரிவித்ததை தொடர்ந்து, அடுத்தடுத்த பல சிறைக் கைதிகளையும், சிறுவர் சீர்திருத்த பள்ளிகளுக்கும் செல்லும் முயற்சியை முன்னெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கொளுத்திப்போட்ட அருணின் அம்மா.. முத்துவுக்கு வில்லியாக மாறிய சீதா - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்
வாய்ப்பில்ல ராஜா... குணசேகரன் பற்றி புது குண்டை தூக்கிப்போட்ட சாமியாடி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்