இறுதி கட்ட படப்பிடிப்பில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'..! எங்கு நடக்கிறது தெரியுமா?

Published : Aug 17, 2021, 07:38 PM IST
இறுதி கட்ட படப்பிடிப்பில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'..! எங்கு நடக்கிறது தெரியுமா?

சுருக்கம்

நயன்தாரா அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வரும் படமான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' குறித்து அவ்வபோது சில தகவல் வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு எங்கு நடந்து வருகிறது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.  

நயன்தாரா அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வரும் படமான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' குறித்து அவ்வபோது சில தகவல் வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு எங்கு நடந்து வருகிறது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

நயன் காதலர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. இந்த படத்தில், 'நானும் ரௌடி' தான் படத்தை தொடர்ந்து, மீண்டும் விஜய்சேதுபதி, நயன்தாராவை வைத்து இயக்குகிறார் விக்னேஷ் சிவன், சமந்தாவும் மற்றொரு நாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் இந்த படம் குறித்து சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

'காத்து வாக்குல ரெண்டு காதல்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முதல் கட்டமாக ஹைதராபாத்தில் துவங்கி தொடர்ந்து நடைபெற்றது. இதுவரை சுமார் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட முடிவடைந்த நிலையில், திடீரென லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. எனினும் தற்போது படப்பிடிப்புகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து ஹைதராபாத்திலேயே படப்பிடிப்பு நடந்து வந்தது.

இதை தொடர்ந்து இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் படக்குழுவினர் தற்போது, புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனர். சுமார் ஒரு வாரம் வரை புதுவை மற்றும் அதனை சுற்றி உள்ள இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல்... புதுச்சேரி நயன் - விக்கி இருவருக்குமே மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று என்பதும், நானும் ரவுடி தான் படத்தின் போது இவர்களின் காதல் இங்கு தான் மெல்ல மெல்ல வளர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. முடிந்த வரை விரைவாக படப்பிடிப்பை முடித்து வரும் அக்டோபர் மாதத்திலேயே படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நான் யாரையும் திருமணம் செய்யவில்லை - பட்டாஸ் பட நடிகை மெஹ்ரீன் ஆவேசம்!
மாதம்பட்டி ரங்கராஜ் ஜாமினில் வெளியே வரமுடியாதபடி வழக்குப்பதிவு... ஜாய் கிரிசில்டாவின் அடுத்த அதிரடி