கண்ணீர் விட்ட அமலா பால்... “இதற்கு வேறு வழியில்லையா” என கதறல்... காரணம் இது தான்...!!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jul 14, 2020, 02:00 PM IST
கண்ணீர் விட்ட அமலா பால்... “இதற்கு வேறு வழியில்லையா” என கதறல்... காரணம் இது தான்...!!

சுருக்கம்

இந்நிலையில் கண்ணீர் வடிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால் அதை பார்க்கும் ரசிகர்களோ அதற்காக வருத்தப்படாமல் சிரிந்து கலாய்க்கின்றனர்.   

“தலைவா” படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக  2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.  விவாகரத்திற்கு பிறகு அமலா பால் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். 

 

இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகாவிற்கு சவால் விட்ட சமந்தா... மாமனார் சொன்ன காரியத்தை எப்படி முடிச்சிருக்காங்க பாருங்க

விவாகரத்திற்கு பிறகு அமலா பால் நடித்த “ஆடை” திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது. தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அதே அந்த பறவை போல படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.  இதனிடையே அமலா பால் மும்பையைச் சேர்ந்த பாடகர் ஒருவரை காதலிப்பதாகவும், அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. 

 

பாடகர் பவ்னிந்தர் சிங் என்பவருக்கும், அமலா பாலுக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றதாக கூறப்பட்டது. திருமண புகைப்படங்களும் வெளியாகின, அதில் அமலா பால், பவ்னிந்தருக்கு லிப் லாக் கொடுப்பது போன்ற நெருக்கமான புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால் அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்று வெளியான செய்திகள் முற்றிலும் வதந்தி என அவரது தரப்பில் மறுக்கப்பட்டது. 

 

இதையும் படிங்க: 14 வயதிலேயே தன்னை அறியாமல் தாறுமாறாக உருவெடுக்கும் அனிகா... கேரள உடையில் நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...!

இடையில் அமலா பால் தனது ஆண் நண்பருக்கும், ரசிகருக்கும் முத்தம் கொடுக்கும் வீடியோக்களும் வெளியாகி வைரலாகின. திரைத்துறையைப் பொறுத்தவரை பல சர்ச்சைகளை அமலா பால் ஈசியாக கடந்துள்ளார். இந்நிலையில் கண்ணீர் வடிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால் அதை பார்க்கும் ரசிகர்களோ அதற்காக வருத்தப்படாமல் சிரிந்து கலாய்க்கின்றனர். 

 

இதையும் படிங்க: “ஐ அம் இன் லவ்”... 3வது முறையாக காதல் வயப்பட்ட அமலா பால்... வைரலாகும் போட்டோஸ்...!

அதற்கான காரணம் இதுதான், அமலா பாலுக்கு மிகவும் பிடித்த கேரள உணவான ஷகஷூகா என்ற உணவை சமைப்பதற்காக வெங்காயம் நறுக்கிய போது கண்ணீர் விட்டு கதறியுள்ளார். இதற்கு வேறு வழியே இல்லையா? என்ற கேள்வியுடன் அமலா பால் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், வெங்காயம் வெட்டும் போது கண்கலங்கி தான் ஆக வேண்டுமென கலாய்த்துள்ளனர். இதோ அந்த வீடியோ... 

"

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!