
உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது தமிழகத்தை அடுத்து மும்பையிலும் அதிகம் பரவி வருகிறது. இதனை கட்டு படுத்தும் முயற்சியில் சுகாதார துறையினர் முழு வீச்சில் இறங்கி இருந்தாலும், அவ்வப்போது பலர் கொரோனா தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய்யின் குடும்பத்தினர் மொத்தமும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐஸ்வயாவின் மாமியார் எம்.பி.ஜெயாபச்சனுக்கு மட்டும் கொரோனா நெகடிவ் என வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகை ஐஸ்வர்யா ராய்யின் மாமனாரும், பாலிவுட் சூப்பர் ஸ்டாருமான அமிதாப் பச்சன், மற்றும் ஐஸ்வர்யா ராய்யின் கணவர் அபிஷேக் பச்சன் ஆகியோர் தற்போது மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஐஸ்வர்யா ராய் மற்றும், அவருடைய மகள் ஆராத்யா இருவரும் வீட்டிலேயே தலைமை படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள்.
அதே போல், இவர்களுடைய வீட்டில் பணியாற்றிய 30 க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராய் குடும்பத்தினர் அடிக்கடி சென்று வந்த, 4 பங்களா சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய குடும்பத்தினர் விரைவாக குணமடைய வேண்டும் என ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் கடவுளிடம் பிராத்தனை செய்வதாக தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராய்யின், முன்னாள் காதலரும், நடிகருமான விவேக் ஓபராய் விரைவில் ஐஸ்வர்யா ராய் குணமடைய வேண்டும் என பிரதிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா ராய், தன்னுடைய மகளுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பதிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.