Naga Chaitanya vs Akhil : யாருக்கு சொத்து மதிப்பு அதிகம்? நாக சைதன்யா? அகில் அக்கினேனி?

By Asianet Tamil  |  First Published Aug 13, 2024, 2:44 PM IST

நடிகர் நாக சைதன்யாவின் இரண்டாம் திருமணம் குறித்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சூழலில் அவரது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. நாகார்ஜுனா குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 3654 கோடியாக உள்ளது.


இந்திய திரையிலகில் நாகார்ஜுனா குடும்பத்தை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தற்போது டிரண்டிங்க்கில் இருப்பவரும் நாகார்ஜுனாவும் அவரது மகன் நாக சைதன்யாவும் தான். எப்போது எல்லாம் நடிகை சமந்தாவை பேசுகிறோமோ அப்போதெல்லாம், நாக சைதன்யாவும் பிக்சருக்குள் வந்து கொண்டு இருந்தார். தற்போது, மீண்டும் நாக சைதன்யா மீடியாக்களில் பிரபலமாகி வருகிறார். இதற்குக் காரணம் நடிகை சோபிதா துலிபாலாவை இவர் திருமணம் செய்வது தான்.

நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் முதல் திருமணம் நடந்தது. நாக சைதன்யாவின் குடும்பத்திற்குள் சமந்தா நுழைந்தபோது, ​​அதாவது 2017 ஆம் ஆண்டில் அவரது தனிப்பட்ட 100 கோடி சொத்துக்களுடன் அக்கினேனி குடும்பத்தின் ஒட்டு மொத்த நிகர சொத்து மதிப்பை உயர்த்தினார். இருப்பினும், நாக சைதன்யா மற்றும் சமந்தாவின் விவாகரத்துக்குப் பிறகு குடும்பத்தின் ஒட்டுமொத்த மதிப்பு குறைந்தது. தற்போது, ​ நாக சைதன்யா குடும்ப சொத்து மதிப்பு ரூ. 3654 கோடியாக உள்ளது. 

Tap to resize

Latest Videos

நாக சைதன்யாவுக்கு இன்று நிச்சயதார்த்தம்... அவருக்கு இரண்டாம் தாரமாக வாக்கப்படப்போற நடிகை யார் தெரியுமா?

நாகார்ஜுனா தனது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பில் அதிகபட்ச பங்களிப்பை அளித்துள்ளார்.  அதே வேளையில், அவரது மகன்கள் அகில் அக்கினேனி மற்றும் நாக சைதன்யாவும் தங்களது பங்களிப்பை அளித்துள்ளனர். நாகார்ஜுனாவின் 3000+ கோடி தனிநபர் மதிப்பில் மேலும் பல கோடி சொத்துக்களைச் சேர்த்துள்ளனர். இப்போது, ​ புதிய மருமகளாக, நாக சைதன்யாவின் இரண்டாவது மனைவியாக சோபிதா துலிபால அவர்களது குடும்பத்துடன் இணைகிறார். இது மேலும் அவர்களது குடும்ப சொத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். 

அகில் அக்கினேனியின் சொத்து மதிப்பு எவ்வளவு?
நாக சைதன்யாவின் சகோதரரும், நாகார்ஜுனா மற்றும் அமலா அக்கினேனியின் மகனுமான அகில் அக்கினேனியின் தனிநபர் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 59 கோடியாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருக்கிறார். 

நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு ரூ. 154 கோடி:
லால் சிங் சதாபடத்தின் நடிகரான நாக சைதன்யா தனது ஒன்றுவிட்ட சகோதரர் அகில் அக்கினேனியை விட 161% அதிக நிகர சொத்து மதிப்பு வைத்திருக்கிறார். அதாவது நாகார்ஜூனா குடும்பத்திற்கு அதிக சொத்து மதிப்பை சேர்த்துள்ளார். இவர் மட்டும் தனக்கென்று ரூ. 154 கோடி அளவிலான நிகர சொத்து மதிப்பை வைத்திருக்கிறார். ஆனால், இவரது சகோதரரின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ.  59 கோடியாக மட்டுமே உள்ளது.

அவ நாய் ஆக பிறக்கட்டும்... சமந்தா பற்றி நாக சைதன்யாவின் 2வது மனைவி சோபிதா துலிபாலா போட்ட பதிவு வைரல்

நாகார்ஜுனா குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு?
தற்போதைய தகவல்களின்படி, நாகார்ஜுனவின் குடும்பத்தின் நிகர சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 3441 கோடியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் மும்பை மற்றும் ஹைதராபாத்தில் பல சொத்துக்களை வைத்துள்ளார். ஜூப்லி ஹில்ஸில் உள்ள அவரது முன்னோர்களின் வீட்டின் மதிப்பு 50 கோடி என்று கூறப்படுகிறது. இதுதவிர அவருக்கு 43 - 45 கோடி மதிப்பிலான வீடும் இருக்கிறது. 

குடும்பத்தின் முக்கிய வருமானமே அக்கினேனி நாகேஸ்வர ராவ் 1976 இல் நிறுவிய அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இருந்து வருகிறது. இந்த ஸ்டுடியோ 22 ஏக்கர் பரப்பளவில் பஞ்சாரா ஹில்ஸில் அமைந்துள்ளது. 

click me!