
இன்று இன்னும் இருமணி நேரங்களில் ‘நேர்கொண்ட பார்வை’படத்தின் ‘அகலாதே’பாடல் ரிலீஸாக உள்ள நிலையில் இப்படத்தின் ஒரிஜினலான ‘பிங்க்’படத்தை தமிழ்ப்படத்தின் நீளம் 22 நிமிடங்கள் அதிகமாகவுள்ள தகவல் அஜீத் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்காக இப்படத்தை தயாரித்துள்ளார் போனி கபூர். இப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்தனர்.இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகும் இப்படத்தின் ரன்னிங் டைம் 158.11 நிமிடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிங்க் படத்தின் ரன்னிங் டைம் 136 நிமிடங்கள் தான். ரீமேக்காக இருக்கும் பட்சத்தில், இரு படங்களின் ரன்னிங் டைம் வித்தியாசப்படுவது ஏன் என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. இந்நிலையில், பிங்க் படத்தை காட்டிலும் ’நேர்கொண்ட பார்வை’ படத்தில் சண்டை காட்சிகள், பாடல்கள் அதிகம் உள்ளதால் ரன்னிங் டைமில் வித்தியாசப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தி ஒரிஜினலில் அமிதாப்புக்கு ஜோடி இல்லை. ஆனால் தமிழில் அஜீத்துக்கு ஜோடியாக வித்யாபாலனும் அவருடன் ஒரு ரொமாண்டிக் பாடலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.