ஜூன் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா நெஞ்சம் மறப்பதில்லை; டவுட்டு தான்…

 
Published : Jun 28, 2017, 09:52 AM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
ஜூன் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா நெஞ்சம் மறப்பதில்லை; டவுட்டு தான்…

சுருக்கம்

nejam marapathillai Release on June 30th its not sure

இரண்டாம் உலகம் படத்தின் தோல்விக்குப் பிறகு சில ஆண்டுகள் கழித்து செல்வராகவன் இயக்கியுள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை.

எஸ்.ஜே. சூர்யா, ரெஜினா, அட்டகத்தி நந்திதா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் பல மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தப் படத்தை தயாரித்துள்ள இயக்குனர் கெளதம்மேனன்.

இந்த நிலையில், ஜூன் 30-ந்தேதி ரிலீஸ் செய்வதாக தற்போது விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தேதியில் நெஞ்சம் மறப்பதில்லை படம் ரிலீஸ் ஆகுமா என்று ஆவலோடு எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது.

தயாரிப்பு நிறுவனம் சிலருக்கு சம்பள பாக்கி கொடுக்க வேண்டியிருப்பதாகவும், பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுவதால் ஜூன் 30-ஆம் தேதியும் படம் ரிலீஸ் ஆவது டவுட்டு என்ற தகவல் கசிந்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2 வசூல் வேட்டை: 10 நாட்களில் இத்தனை கோடியா? பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கும் பாலகிருஷ்ணா!
தமிழ் பிக்பாஸ் 9ல் சிறந்த டாப் 5 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? டாப்பில் பாருவா?