அந்த விளையாட்டில் நயன்தாரா ரொம்ப கெட்டி… விக்னேஷ் சிவன் தோத்துப் போயிட்டார் !!

By Selvanayagam PFirst Published Sep 24, 2018, 8:24 AM IST
Highlights

பேக்மேன் ஸ்மாஷ் என்ற விளையாட்டில் நயன்தாராவிடம் தான் தோற்றுப் போனதாக  இயக்குநரும், நயன்தாராவின்  காதலருமான விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் காதல் தான் கோடம்பாக்கத்தின் இப்போதைய ஹாட் டாக். இருவரும் அமிர்தசரஸ் பொற்கோவிலில் எடுத்துக் கொண்ட புகைப் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாயின.

நயன்தாராவும் டைரக்டர் விக்னேஷ் சிவனும் ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பில் காதல் வயப்பட்டு நெருங்கி பழகி வருகிறார்கள். வெளிநாடுகளிலும் ஜோடியாக சுற்றுகிறார்கள். இருவரும் நெருக்கமாக எடுத்த படங்களை சமூக வலைத்தளங்களிலும் வெளியிடுகிறார்கள். இவர்களுக்கு ரகசியமாக திருமணம் முடிந்துவிட்டது என்று சிலரும், திருமணம் செய்து கொள்ளாமலேயே சென்னை எழும்பூரில் நயன்தாரா புதிதாக வாங்கி உள்ள வீட்டில் சேர்ந்து வாழ்கிறார்கள் என்று சிலரும் பேசி வருகின்றனர்.

ஆனால் தங்கள் காதல் பற்றி இதுவரை அவர்கள் வாய் திறக்கவில்லை. மற்றவர்கள் பேசுவதையும் கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் ஜோடியாக சுற்றும் படங்களை மட்டும் தவறாமல் வெளியிட்டு அதிர்வை உருவாக்கி வருகிறார்கள்..

இந்தநிலையில்,   சமீபத்தில் தனது 34-வது பிறந்தநாளைக் கொண்டாடிய விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் இன்பச்சுற்றுலா  சென்றுள்ளார். அப்போது இருவரும் பேக்மேன் ஸ்மாஷ் என்ற விளையாட்டை விளையாடியுள்ளனர்.

இந்த வீடியோவை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் 1050 புள்ளிகளை நயன்தாரா பெற்றுள்ளார். 700 புள்ளிகளை பெற்ற விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் தோல்வி அடைந்துள்ளார். இந்த விளையாட்டில் நயன்தாராவிடம் தோற்றது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

click me!