
நடிகர் விக்ரமின் மகன் துருவ், தெலுங்கில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற திரைப்படமான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் மூலமாக முதல் முறையாக, விக்ரம் மகன் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளதால், ரசிகர்கள் அனைவர் மத்தியிலும் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. மேலும் இந்த படத்தில், தன்னுடைய மாஸ் நடிப்பால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட, விஜய் தேவகொண்டாவுக்கு இணையாக இவர் நடிப்பாரா என பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வந்தனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து போஸ்ட் ப்ரோடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துருவ் நடித்துள்ள 'வர்மா' பட டீசரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.
இந்த டீசரில், நடிகர் விஜய் தேவ கொண்டாவுக்கு நிகராக, துருவ நடித்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த படத்தில் துருவுக்கு ஜோடியாக, நடிகை மேகா சவுதிரி நடித்துள்ளார். துருவை துரத்தி துரத்தி காதலிக்கும் நடிகையாக பிக்பாஸ் ரைசா நடித்துள்ளார். வேலைக்காரி வேடத்தில் நடிகை ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார் என இந்த டீசரை பார்த்தாலே தெரிகிறது.
மேலும் இந்த திரைப்படத்தில் பாலாவின் சற்று வித்தியாசமான இயக்கத்தை காண முடியும் என கூறப்படுகிறது. பெரும்பாலும் லிப் டூ லிப் காட்சிகளை தன்னுடைய படஙக்ளில் தவிர்த்து விடும் பாலா இந்த படத்தின் கதைக்காக 5 திற்கும் மேற்பட்ட முத்த காட்சிகள் உள்ளதாம். இதனை உருட்டி படுத்தும் விதமாக தற்போது டீசரில் கூட செம ஹாட் கிஸ் சீன் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
தெலுங்கில் முதல் பாதியில் மட்டும் 10 திற்கும் மேற்பட்ட முத்த காட்சிகள் இருக்கும் நிலையில், இது எதிர்பார்த்ததை விட குறைவு எனலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.