
நான் நினைச்சா யாருக்கு வேண்டுமானாலும் பட்டுத்துணி சார்த்தி பஞ்சாமிர்தம் ஊட்டுவேன் என்கிற அளவுக்கு துணிச்சல்காரி ஆகிவிட்டார் நயன்தாரா. அப்படி பஞ்சாமிர்தத்தை விக்னேஷ் சிவனுக்கு ஊட்டிவிட்டுக் கொண்டிருக்கும் நயன்தாரா அவரது இன்னாள் காதலனின் பிறந்த நாளை திகட்டத் திகட்டக் கொண்டாடி தீர்த்து விட்டார்.
‘’நாம எப்போதுமே சிரிச்சுக்கிட்டே இருக்கணும்... எப்போதும் சந்தோஷமா இருக்கணும்’’என தனது காதலன் விக்னேஷ் சிவனிடம் உருகி மருகி வாழ்த்துகள் சொல்லி குஷிப் படுத்தினார். கருப்பு உடை அணிந்து இந்த பிறந்த நாளை கொண்டாடியது நயன் ஜோடி. இது ஒருபுறமிருக்கட்டும்.
தனக்கு மேக்கப் போட்டு வரும் ஒரு சாதாரண ஒப்பனை கலைஞனை, கால்ஷீட் மேனேஜராக்கி அவருக்கு கவுரவம் சேர்த்தவர் நயன். இப்போது மயில்வாகன் என்பவரை தான் தயாரிக்கும் ‘நெற்றிக்கண்’படத்தின் இணைத் தயாரிப்பாளர் ஆக்கியிருக்கிறார். யாரிந்த மயில்வாகனன்? விக்னேஷ்சிவனின் மேனேஜர்.
பொதுவாகவே தன்னை சுற்றியிருக்கும் தொழிலாளர்களை வேறொரு லெவலுக்கு கொண்டு செல்லும் விஷயத்தில் நயனுக்கு நிகர் அவரே. இப்போதும் மற்ற மற்ற நடிகைகளிடம் பணியாற்றும் ஹேர் டிரஸ்சர்கள், கார் டிரைவர்கள், மேக்கப் அசிஸ்டென்டுகளுக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட, அதிக சம்பளத்தை தன் படத் தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் நயன். தனது காதலனை தயாரிப்பாளர் ஆக்கி விட்டு காதலனின் மேனேஜரை இணைத் தயாரிப்பாளர் ஆக்கி தனது தாராள மனதை வெளிப்படுத்தி இருக்கிறார் நயன்தாரா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.